அறிவாலயத்தை அடிக்குறத விட எனக்கு என்ன ரெஸ்ட் - அண்ணாமலை இஸ் பேக்!
By : Mohan Raj
இதோ இங்கதான் இருக்கு பாஜக என அண்ணாமலை அடித்த அடிதான் இப்போ அரசியலில் ஹாட் டாபிக்!
2023 கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட தேர்தல் பரப்புரை திங்கட்கிழமை உடன் முடிவடைந்து மொத்தம் 224 தொகுதிகளுக்கும் மே 10 அன்று கர்நாடக முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்றது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் மாநிலங்களாக நினைக்கும் மாநிலங்களில் முக்கியமான கர்நாடகா திகழ்கிறது. மேலும் இந்த கர்நாடக தேர்தலில் பலமுனை போட்டியிருப்பதாலும் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த தேர்தலில் கிட்டத்தட்ட 65 சதவீத வாக்குப்பதிவுகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆளுங்கட்சியாக பாஜக இருந்து வருகின்ற சமயத்தில் இந்த தேர்தலுக்குப் பிறகும் தனது ஆளுமையை தொடர்வதற்கு 113 இடங்கள் தேவைபடுகிறது.
தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட பரப்புரையில் பாஜகவின் சார்பில் நடத்தப்பட்ட பிரச்சாரம் பிரபல நட்சத்திர பிரச்சாரம் என்று கூறப்படும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல முக்கிய அமைச்சர்கள் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். அதோடு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடக தேர்தலில் மேற்பார்வையாளராக இருந்து தனது பணியாற்றினார். கிட்டத்தட்ட 80 தொகுதிகளின் வாக்காளர்கள் அண்ணாமலையின் அறிவுரையின்படி போடப்பட்டவர்கள் தான், மேலும் கர்நாடகாவில் அவர் பணியாற்றிய அனுபவத்தை வைத்து வேட்பாளர்களை தேர்வு செய்து பட்டியலிட்டார். இந்த நிலையில் தேர்தலுக்குப் பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கூறப்படுவதே வெல்லும் என கூறப்படுகிறது.
அதாவது கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பது குறித்து ஓட்டுப்பதிவுக்கு பின்பு மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. பெரும்பான்மையாக பாஜக வேண்டுமென்றும், பாஜகவிற்கு சாதகமான பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கிறது என்றும் கூறப்படுகிறது. மே 13 இல் ஒட்டு மொத்த ஓட்டுகளும் எண்ணப்பட்டு அன்று முடிவுகள் கூறப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டி நடவுவதால் யார் பெரும்பான்மையில் வெற்றி பெறுவார் என்ற ஆர்வத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் பாஜகவே மறுபடி தனது ஆட்சியை நிலைநாட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி அண்ணாமலை தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றிய முதல் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றியை பெற்றுள்ளதால் அடுத்ததாக தமிழக அரசியலில் பல அதிர்ச்சி தரக்கூடிய மாற்றங்கள் ஏற்பட இருப்பதாகவும் அதற்காக அண்ணாமலை பல திட்டங்களை திட்டமிட்டு வருவதாகவும் கமலாய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் பாஜகவின் அடுத்த கட்ட பணியாக ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ள பாதயாத்திரையில் அதிக கவனம் தற்போது செலுத்த உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. கர்நாடகாவில் கிட்டத்தட்ட வெற்றியை கண்டு விட்டு பிறகு தமிழகத்தில் ஏற்கனவே அரசியல் நடவடிக்கைகளை தொடங்கி இன்னமும் அதிதீவிரமாக வரப்போகும் மாதங்களிலும் அண்ணாமலை தனது தீவிரத்தை காட்டுவார் என பாஜகவினர் கூறிவந்த நிலையில் கர்நாடகத்தில் இருந்து திரும்பியவுடன் தனது அதிரடியை துவங்கிவிட்டார் அண்ணாமலை!
கர்நாடகா தேர்தல் வேலை முடிந்தவுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காலை 11:45 மணிக்கு எல்லாம் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்தார். அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் 'கருணாநிதி காலத்தில் பாஜக எங்கிருக்கிறது என கேட்டார்! ஆனால் இப்பொழுது 1400 கோடி ரூபாய் அளவிற்கு திமுகவில் இருப்பவர்கள் அலறியடித்துக் கொண்டு வழக்கு போடும் அளவிற்கு பாஜக இருக்கிறது என்று நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்' என்றபடி திமுகவினர் மீது அடுத்தடுத்த கட்ட சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்தார். இப்படி வந்தவுடன் கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காமல் திமுகவை தட்டி தூக்க ஆரம்பித்தது அறிவாலயத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.