கொலை முயற்சி வழக்கில் திருமாவளவனுக்கு இறங்கப்போகும் இடி! - இன்னும் ஒரு மாசம்தான்!
By : Mohan Raj
இறுகும் திருமாவளவனுக்கு எதிரான கொலை முயற்சி வழக்கு
விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் தற்போது சிதம்பரம் தொகுதி எம்பி ஆக உள்ளார் இந்நிலையில் 2024 ல் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் திருமாவளவன் மீண்டும் எம்பி தேர்தலில் போட்டியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது வரை திமுகவின் கூட்டணியில் இருந்து வருகிறது விசிக. சில மாதங்களுக்கு முன்பு நடந்த திமுக மாவட்ட செயலாளர் பொதுக்கூட்டத்தில் பலம் வாய்ந்த கூட்டணி அணிகளுடன் நாடாளுமன்றத் தேர்தலை திமுக எதிர்கொள்ளும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். அதை வைத்து பார்க்கும் பொழுது திமுக, பாமக மற்றும் வி சி க உடன் கூட்டணி வைக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிய வருகிறது. அதே மாதிரி திருமாவளவன் திமுக உடனான கூட்டணியை அவ்வப்போது உறுதி செய்து வந்து கொண்டே உள்ளார். ஆனால் அரசியலில் பின்னடைவு ஏற்பட்டாலும் பாமக மற்றும் பாஜக கூட்டணியில் சேர மாட்டேன் என்றும் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். அதோடு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நீங்களும் திமுக காரர் போல் பேசுகிறீர்களே என்று செய்தியாளர் கேட்டதற்கு கடும் கோபத்துடன் நான் என்ன திமுக காரனா இப்படி எல்லாம் பேசுற வேலை வச்சுக்காதீங்க என்று கூறியிருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் பாமக தலைவர் அன்புமணியும் விசிக தலைவர் திருமாவளவன் இணைந்து செயல்படும் வகையில் ரகசிய பேச்சுகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இப்படி 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக தன்னை முழுவதுமாக ஆயுத்தப் படுத்திக் கொண்டிருக்கின்ற திருமாவளவனின் வழக்கு ஒன்று இறுதி விசாரணையை தற்போது எட்டி உள்ளது. அதாவது விசிக கட்சி அலுவலகத்தில் உள்ள வீரப்பன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் வேதா அருண் நாகராஜ் 2011 ஆம் ஆண்டு புகார் அளித்தார். பிறகு வீரப்பன் திருமாவளவன் போன்றோருக்கு எதிராக கொலை முயற்சி திருட்டு ஆபாசமாக பேசுதல் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. வழக்கு பதியப்பட்டாலும் அரசியல் அழுத்தத்தின் காரணமாக காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு ஒன்றும் பதியப்பட்டது. இந்த வழக்கிற்கு தீர்ப்பளித்த நீதிபதி சந்திரசேகர் வழக்கு தொடுக்கப்பட்ட நேரத்தில் புலன் விசாரணை முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய இவ்வளவு நீண்ட காலம் ஏன் எடுக்கப்பட்டது என்பது புரியவில்லை, ஆதலால் தற்போது விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கின் இறுதி அறிக்கையை ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களில் உள்ள நிலையில் தேர்தல் பணிகளை நடத்தலாம் என்று முடிவு செய்திருந்து அதனை ஆரம்பித்த திருமாவளவனுக்கு இந்த வழக்கில் எதிரான தீர்ப்பு ஏதேனும் வந்தால் அது அவரது அரசியல் வாழ்வில் ஒரு மாற்றத்தை உண்டாக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் பட்சத்தில் அந்த வழக்கில் நீதிபதிகள் திருமாவளவனுக்கு தண்டனையோ அல்லது வேறு ஏதேனும் எதிரான தீர்ப்புகள் வந்தால் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவதற்கான மாபெரும் தடையாகவே அது அமையும் என்றும் கூறப்படுகிறது. இதனால் திருமாவளவன் தரப்பு மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறது. ஏற்கனவே கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருமாவளவனுக்கு ஒரு தொகுதி கூட அளிக்கப்படவில்லை, அதனையும் பெரிது படுத்தாமல் தனது கவலையை மனதிற்குள் வைத்துக் கொண்டு கர்நாடக பிரச்சாரத்தை மேற்கொண்ட திருமாவளவனனுக்கு தற்போது இந்த வழக்கு விசாரணை மேற்கொண்டு தீர்ப்பை நோக்கி நகர்கிறது என்ற தகவல் ஆழ்ந்த சோகத்தில் தள்ளி உள்ளது.