இப்படி அநியாயம் பண்றீங்களே? - உதயநிதி தொகுதியில் கலங்கி நிற்கும் ஏழை பெற்றோர்!
By : Mohan Raj
உதயநிதி தொகுதியில் பரிதவித்து நிற்கும் அரசு பள்ளி மாணவர்கள்!
திமுக தலைவர் மு க ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற ஒரே ஆண்டில் அமைச்சராகவும் ஆகினார். கலைஞர் கருணாநிதி போட்டியிட்டு இப்போது அவரது பேரனாகிய உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்ற சேப்பாக்கம் தொகுதி மற்றும் இன்று வரை அப்படியே இருந்து வருகிறது.
இந்த நிலையில் சேப்பாக்கம் தொகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி பள்ளியின் கட்டடம் ஒன்று இடிக்கப்பட்டு இப்போது அந்த இடத்தில் திருமண மண்டபம் கட்டி வருவதாக தகவல்கள் வெளிவந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பங்காரு தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியின் கட்டிடம் பழுதாகி இடிந்துவிடும் நிலையில் இருந்ததால் அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டப்படும் என மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த பள்ளி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. இப்படி பள்ளியின் கட்டிடம் இடிக்கப்பட்டதால் அந்த பள்ளியில் படித்த 115 மாணவர்கள் புதிய கட்டிடம் வரும் வரை அருகில் உள்ள மற்றொரு பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.
மாநகராட்சி பள்ளி கட்ட பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் பள்ளிக்காக கட்டுவதாக கூறி இப்போது திருமண மண்டபம் கட்டப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை கண்டித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இதை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இவர் மே 12, 2023 தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு திருமண மண்டபம் கட்டப் போவதாக நாளிதழில் வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது எனவும், அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் உள்ள இந்தப் பள்ளியில் 115 மாணவர்கள் பயின்று வருகின்றனர், தமிழகத்தில் சுமார் 10,000 சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடித்து, புதிய பள்ளி கட்டடங்கள் கட்டப்படும் என அறிவித்துவிட்டு அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பள்ளிகளுக்கான இடத்தில் வணிக வளாகங்களை அமைக்கும் எண்ணம் இருந்தால் அது வன்மையான கண்டனத்திற்குரியது, உடனடியாக இந்த பள்ளி மட்டும் இல்லாது தமிழகம் முழுவதும் சேதமடைந்த பள்ளிகள் அனைத்திற்கும் அதே இடத்தில் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்ட வேண்டும், மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம் என்று பிஜேபி சார்பாக வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலையின் இந்த கருத்தை ஆதரிக்கும் விதமாக பல முக்கிய பிரமுகர்களும் பொதுமக்களும் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களும் திமுக மீதான தங்களது கண்டனத்தையும் கூறி வருகின்றன.
திமுகவினரின் இந்த செயலை கண்டித்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் முன்பு மறியலில் ஈடுபட்டு வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன இந்த நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் கூறுவதாக, எங்க பிள்ளைங்க இந்த இடத்தில் தான் படிக்கணும், எங்களுக்கு இந்த இடத்தில் தான் ஸ்கூல் வேணும் இந்த இடத்தை விட்டு வேற எங்கேயாவது தூரத்தில் ஸ்கூல் கட்டினால் எங்க பிள்ளைங்க ரோடு கிராஸ் பண்ணி போயி படிக்க முடியாது, நாங்க ரொம்ப கஷ்டப்படுற ஏழை குடும்பங்கள், எங்களுக்கு இந்த பள்ளி தான் வேணும், வேற எந்த பள்ளியிலும் சேர்க்கிற அளவுக்கு என்கிட்ட வசதி இல்ல அதனால இதே இடத்தில தான் எங்களுக்கு பள்ளிக்கூடம் அமைத்து தர வேண்டும் என அந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி இடத்தில் திருமண மண்டபம் கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என முதல்வர், அமைச்சர்கள் நேரு, உதயநிதி ஸ்டாலின், மாநகராட்சி மேயர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்துள்ளனர்.
இப்படி அந்தப் பகுதியில் திருமண மண்டபம் கட்டக்கூடாது பள்ளி கட்டிடம் தான் கட்ட வேண்டும் என பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இது குறித்து உதயநிதி ஸ்டாலின் இன்று வரை எதுவுமே சொல்லவில்லை என்பதால் அந்தப் பகுதி மக்களும், அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்