Kathir News
Begin typing your search above and press return to search.

பத்து ரூபா விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியை வச்சு செய்யும் இணையவாசிகள்

பத்து ரூபா விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியை வச்சு செய்யும் இணையவாசிகள்
X

Mohan RajBy : Mohan Raj

  |  24 May 2023 5:57 AM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி பாட்டிலுக்கு எங்கே பத்து ரூபாய் வாங்குகிறார்கள் என்றால் கேட்ட ஒரு கேள்வியால் தற்பொழுது வசமாக சிக்கிக்கொண்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுவிலக்கு ஆயத்துறை தீர்வு அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார், 'மதுபான கடைகளில் பத்து ரூபாய் பாட்டிலுக்கு அதிகம் வாங்குகிறார்கள் என கூறுகிறார்கள். கேட்டால் கரூர் கம்பெனிக்கு செல்கிறது என்கிறார்கள் ஏன் இதை நீங்கள் தடுக்க கூடாது' என கேட்ட பொழுது உடனே அமைச்சர் செந்தில்பாலாஜி, 'எந்த கடையில் வாங்குகிறார்கள்? என்னிடம் அந்த கடையை காட்ட முடியுமா? நான் வருகிறேன்' என்றெல்லாம் கூட செந்தில் பாலாஜி அப்பொழுது அந்த பத்திரிகையாளரிடம் ஆவேசமாக பேசினார். செந்தில்பாலாஜி ஆவேசமாக பேசிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

செந்தில் பாலாஜி இப்படி கேள்வி கேட்ட அதை தொடர்ந்து மது பிரியர்கள் தினமும் நாங்கள் பத்து ரூபாய் அதிகமாக கொடுத்து தான் வாங்குகிறோம் ஆனால் அந்த துறை அமைச்சரும் ஆணவமாக இப்படி எந்த கடை என காட்டுங்கள் எனக் கூறுகிறாரே இதெல்லாம் நியாயமா? என்கின்ற வகையில் கையில் கேமரா மொபைல் உடன் கோதாவில் குதித்தனார். அப்படி கோதாவில் மதுபிரியர்கள் குதித்ததன் விளைவாக தமிழகத்தின் பெரும்பாலான டாஸ்மாக்குகளில் பத்து ரூபாய் வாங்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக உலா வருகிறது.

ஒரு கடையில் ஊழியரிடம் மது பாட்டில் வாங்குபவர் கேட்கிறார் ஏன் பத்து ரூபாய் வாங்குகிறீர்கள் பத்து ரூபாய் வாங்கி யாருக்கு செல்கிறது எல்லாம் மேல் இடத்திற்கு தான் போவது என்கிறார் டாஸ்மாக் ஊழியர்


மற்றொரு வீடியோவில் மது வாங்குகிறவர் கேட்கிறார் இப்படி பத்து ரூபா வாங்குகிறீர்களே ஏன் பில் குடுங்க என்று அதற்க்கு டாஸ்மாக் ஊழியர் அதெல்லாம் கிடையாது நான் கொடுக்குறதை வாங்கிட்டு தான் போயிட்டு இருக்காங்க இதெல்லாம் நாங்க வந்து தடுக்க முடியாது பத்து ரூபாய் கூட கொடுத்து இஷ்டம் இருந்தா வாங்கு இல்லன்னா போ என்கிற என பேசுகிறார்.


இப்படி தொடர்ச்சியாக பத்து ரூபாய் பாலாஜி என்ற ஹாஷ் டேக்கில் சமூக வலைதளங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாகும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல் பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி எங்கே பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வாங்குகிறார்கள் காட்டுங்கள் 5000 கடைக்கும் போயிருக்கிறீர்களா என ஆணவத்தில் பேசியதன் காரணமாக தற்பொழுது தமிழகம் முழுவதும் சமூக வலைதளங்களில் இந்த பத்து ரூபா பாலாஜி என்ற பெயரில் பாட்டிலுக்கு டாஸ்மாக் கடையில் பத்து ரூபாய் அதிகமாகும் வீடியோ வைரலாகி வருகிறது.

இது குதித்து எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் நாங்களும் இறங்குகிறோம் என்ற பெயரில் அவரும் களத்தில் இறங்கி விட்டார், பாட்டிலுக்கு செந்தில் பாலாஜி பத்து ரூபாய் அதிகம் வாங்குகிறார் என கூறுகிறார்கள் என அவரும் புகார் தெரிவித்த வீடியோ இணையங்களில் செம்ம வைரல்!


இப்படி செந்தில் பாலாஜி பத்திரிகையாளர் கேள்விக்கு ஆணவமாக பதில் கூறுகிறேன் என்ற பெயரில் தனக்குத்தானே வினை வைத்துக்கொண்டார் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News