Kathir News
Begin typing your search above and press return to search.

யாருக்கும் தெரியாமல் லண்டன் சென்று வந்த உதயநிதி, ஒதுக்கப்பட்ட மாப்பிளை - கசிந்த பரபர தகவல்கள்

யாருக்கும் தெரியாமல் லண்டன் சென்று வந்த உதயநிதி, ஒதுக்கப்பட்ட மாப்பிளை - கசிந்த பரபர தகவல்கள்
X

Mohan RajBy : Mohan Raj

  |  25 May 2023 1:43 PM IST

முதல்வர் சிங்கப்பூர் செல்லும் முன்பு யாருக்கும் தெரியாமல் உதயநிதி லண்டன் சென்று விட்டு வந்த தகவல் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பன்னாட்டு முதலீடுகளை உருவாக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதாவது ஜப்பான் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பயணங்கள் மேற்கொள்ள திட்டமிட்டு முதல்வர் ஸ்டாலின் நேற்று சிங்கப்பூர் புறப்பட்டார். இந்த பயணத்தின் பொழுது இரு நாட்டு தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்களை தமிழ்நாட்டில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைக்கவும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பயண திட்டப்படி முதல்வர் ஸ்டாலின் முதலில் சிங்கப்பூர் செல்ல உள்ளதாகவும் அங்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை சார்ந்த 350 க்கும் மேலான கலந்து கொள்ள உள்ள வணிக நிறுவன பிரதிநிதிகள் உடன் உரையாடி பின்பு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் கையெழுத்திட உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவிக்கிறது.

பிறகு அந்த பயணம் முடிந்த உடன் ஜப்பான் பயணம் மேற்கொள்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின். அந்நாட்டின் தலைநகர் டோக்கியோ மற்றும் ஒடிசா நகரங்களுக்குச் முதல்வர் செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிறகு ஜப்பானில் உள்ள முதலீட்டாளர்களிடம் கலந்துரையாடி தமிழகத்தில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் மேலும் பல்வேறு முதலீடுகள் தமிழகத்திற்கு ஏற்றவாறு ஈர்க்கவும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார் என அரசு தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்னன.

இப்படி முதல்வர் ஸ்டாலின் தொழில் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்காக பயணம் மேற்கொள்கிறார் என்ற அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வந்ததை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தனது அதிகாரிகள் மற்றும் மனைவி துர்கா ஸ்டாலினுடன் சிங்கப்பூர் சென்றார். முன்னதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இரு தினங்களுக்கு முன்னரே சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். முதல் நாளான இன்று சிங்கப்பூரில் தொழில் செய்துவரும் தமிழர்களை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின். பின்னர் பிற தொழில் நிறுவனங்களை சந்திக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உதயநிதி யாருக்கும் தெரியாமல் லண்டன் சென்று வந்து விட்டார் என தகவல் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் இது குறித்து தகவல்களை கசிய விட்டுள்ளார். சவுக்கு சங்கர் கூறியதாவது, 'இரு தினங்களுக்கு முன்புதான் உதயநிதி லண்டனில் இருந்து வந்துள்ளார். எதற்காக இவர்கள் லண்டனை குறி வைத்து செல்கிறார்கள் என தெரியவில்லை. மேலும் இது மட்டுமல்லாமல் மாப்பிள்ளை சபரிசனை தற்பொழுது எதிலும் இவர்கள் சேர்த்துக்கொள்வதே இல்லை. அரசியல் முடிவுகள் எடுப்பதையும் அனுமதிக்கவில்லை ஏனெனில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு விடுமோ என பயந்து தற்பொழுது மாப்பிள்ளை சபரிசனை ஒதுக்கி வைத்து விட்டார்கள். ஆனால் உதயநிதி எதுக்கு லண்டன் சென்று வருகிறார் என தகவல்கள் தெரியவில்லை. மேலும் இது குறித்த தகவல் தெரிந்தால் விரைவில் கூறுகிறேன்' என கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் அறிவித்து சென்றது முன்பு ஏன் உதயநிதி லண்டன் சென்றார் என தற்போது சர்ச்சை கிளம்பி அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. மேலும் சவுக்கு சங்கர், ‘முதல்வர் ஸ்டாலின் கள்ளச்சாராய மரணங்கள் விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது திமுகவின் மூத்த தலைவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் இதன் காரணமாக துரைமுருகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தற்பொழுது திமுகவின் எந்த விவகாரத்தையும் கண்டுகொள்ளவில்லை என்று கூறியது வேறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News