Kathir News
Begin typing your search above and press return to search.

அவிநாசி கோவில், திமுக அமைச்சர் பேச்சு - எங்கேயோ இடிக்குதே?

அவிநாசி கோவில், திமுக அமைச்சர் பேச்சு - எங்கேயோ இடிக்குதே?
X

Mohan RajBy : Mohan Raj

  |  26 May 2023 4:49 PM IST

தொடர்ந்து இந்துக்களை சீண்டும் திமுக

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்கால சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சி கோவையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தமிழக வேளாண் மற்றும் உழவு நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு மேடையில் பேசினார். அதாவது வந்திருக்கிறதோ சிறுதானிய கருத்தரங்கு மற்றும் சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சி அது சம்பந்தப்பட்ட கருத்துக்களை கூறுவதை விட்டுவிட்டு உதாரணமாக இந்து கடவுளை குறிப்பிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். முருகன் சக்கரை வியாதி வரக்கூடாது என்பதற்காகவே தினை மாவு பொருட்களை உட்கொண்டார் அதனாலே அவர் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டார், இரண்டா அல்லது மூன்றா ஆமா முருகன் இரண்டு கல்யாணம் தான் பண்ணிக்கிட்டார். தான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தினை மாவுகளை உட்கொண்ட முருகனைப் போன்று நீங்களும் உட்கொள்ளுங்கள் என்று அமைச்சர் பேசிக்கொண்டிருந்த பொழுது கூட்டத்தில் ஆங்காங்கே எதிர் கருத்துகள் எழுந்துள்ளது. பிறகு காமெடிக்காகவே இதை கூறினேன் என்று மழுப்பி உள்ளார்.

அவிநாசி கோவிலில் சிலை உடைப்பிற்கு தனது கண்டனத்தை அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இனியும் இதுபோன்ற நிகழ்வுகள் இந்து சமயத்திற்கு எதிராக நடைபெறும் என்றால் அதற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தனது எச்சரிக்கையை தெரிவித்து இருந்தார். தற்போது திமுக அமைச்சரின் இந்த இழிவான பேச்சுக்கு பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, கடவுள் முருகன் குறித்து அமைச்சர் பன்னீர்செல்வம் அவமதிக்கும் வகையில் பேசி உள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏதோ சாதாரணமாக கிண்டலாக ஜோதியலாக பேசுகிறேன் என்று இப்படி இந்துக்களின் முக்கிய மற்றும் தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானை பற்றி இழிவாக பேசியது கண்டுகொள்ளாமல் செல்லும் கருத்தல்ல. ஜோவியலாக சாதாரணமாக பேசுவதற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கிறது ஏன் திராவிட மாடலில் இல்லாத உதாரணமா? என்று தனது twitter பக்கத்தில் அமைச்சர் பன்னீர்செல்வத்தின் பேச்சுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் மர்ம நபர் புகுந்து அங்கு இருக்கும் சாமி சிலைகளை உடைத்து, வேல்களை திருட முற்பட்டு பிறகு போலீஸிடம் மாட்டிக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. அடுத்த நாள் காலையில் அர்ச்சகர் வழக்கம் போல் கோவிலை திறந்து உள்ளே வரும்போது தான் தெரிந்திருக்கிறது அங்கு இருந்த சாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பது. மேலும் அங்கிருந்த பல பொருள்களும் களையப்பட்டு இருந்ததை கண்டு உடனடியாக கோவில் நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் புகார் அளித்துள்ளார். புகார்களை பெற்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு சோதனை நடத்தினர். சோதனையில் அந்த கோவிலிலேயே ஒருத்தர் ஒளிந்து இருந்தது தெரியவந்துள்ளது.

பிறகு அவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட பொழுது முருகனுக்கு வெண்கலத்தில் சாத்தப்பட்டிருந்த வேல்களை திருட முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இப்படி தொடர்ச்சியாக இந்து கடவுள் அவமதிப்பு, கோவில் சிலை உடைப்பு, இந்துக்கள் தெய்வத்தை அவமரியாதையாக பேசுவது போன்ற சம்பவங்களுக்கு பின்னணியில், தற்போது தமிழகத்தில் நடக்கும் கள்ளச்சாராய சாவுகள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினை, கஞ்சா விவகாரம், அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ டேப், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறிய 30 ஆயிரம் கோடி விவகாரம், என இவை அனைத்தையும் மறைக்க தானாக இந்த சம்பவங்கள் எழுந்து உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News