அதிகாரிகள் ஸ்கேட்சில் கொத்தாக சிக்கிய செந்தில்பாலாஜி - அடுத்ததாக இறங்கும் பெரிய ஆப்பு!
By : Mohan Raj
அதிகாரிகளை கோபப்படுத்திய அமைச்சர் செந்தில்பாலாஜி ஆட்கள்!
செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்கு சம்பந்தப்பட்ட 200க்கும் உட்பட்ட இடங்களில் அதிகாலை 3 மணி முதல் முதல் வருமானவரித் துறையினரின் அதிரடி ரெய்டில் இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ரெய்டு செய்ய சென்ற அதிகாரிகளை தாக்கியதும் பெண் அதிகாரியை ரெய்டு செய்ய விடாமல் தடுப்பது என பரபரப்பாக இருக்கும் சூழலில் ரெய்டுக்கு வருபவர்கள் வீட்டில் ஏறி குதித்துள்ளனர் என செந்தில் பாலாஜி கூறியதும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதாவது தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வு துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி மீது தொடர்ச்சியாக அதிமுக மற்றும் பாஜக கட்சியிடம் இருந்து எழுந்த புகார்களும் ஆங்காங்கே வெடித்த போராட்டங்களும் சமூக வலைதளத்தில் அவர் பற்றி பரவிய வீடியோக்களாலும் இன்று அதிகாலை முதல் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
செந்தில் பாலாஜிக்கு சொந்தமான மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் அனைத்து மாநிலங்களிலும் வருமானவரித்துறையினர் தனது சோதனைகளை மேற்கொண்டு வருகிற சூழ்நிலையில் செந்தில் பாலாஜி சகோதரரான அசோக் என்பவரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதோடு பல இடங்களில் அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் சில இடங்களில் அதிகாரிகள் சோதனைகளை மேற்கொள்வதற்கு பொதுமக்கள் என்ற பெயரில் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை தாக்கியதாகவும் தகவல்கள் கிடைத்தன. எந்த அளவிற்கு இந்த பிரச்சினை ;வெடித்துள்ளது என்றால் சோதனைக்காக வரும் வருமான வரித்துறையினரின் வாகனங்களை சேதப்படுத்தி உள்ள அளவிற்கு. இந்த சம்பவமும் பெரும் பரபரப்பாகி செய்திகளில் வெளியாகி வெளியானது.
இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொள்ள முடியவில்லை என்று காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதற்குப் பிறகு மற்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சோதனை எதற்காக நடத்தப்பட்டு இருக்கலாம் என்று பல்வேறு தரப்பிடம் இருந்து பல்வேறு கருத்துக்கள் பெறப்படுகின்ற நிலையில் மற்றொரு சம்பவமும் இந்த அதிரடி ரெய்டில் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகிற வருமான வரித்துறையினர் கரூரில் செந்தில் பாலாஜி நண்பரான தங்கராஜ் என்பவர் வீட்டிலும் சோதனை மேற்கொள்வதற்காக இன்று சென்றுள்ளனர். ஆனால் அவரது வீடு பூட்டி இருந்த காரணத்தினால் வீட்டின் உள்ளே யாரும் இல்லாத நிலையும் ஏற்பட்டிருக்கிறது இருந்தாலும் வருமானவரித்துறை அதிகாரிகள் பூட்டி இருந்த வீட்டில் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று சோதனைகளை மேற்கொண்டுள்ளதாக சமூக வலைதளத்தில் வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன.
ரெய்டு நடத்த வேண்டும் என அதிகாரிகள் முன்னரே திட்டமிட்டு ரகசியமாக நடத்தியதாகவும், கரூர் மாவட்ட எஸ்பிக்கு கூட தகவல் தெரிவிக்கப்படவில்லை எனவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இது மட்டுமல்லாமல், இன்று ஆரம்பிக்கும் வருமான வரித்துறையினரின் சோதனை இன்னும் சில தினங்களுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அனைத்து வங்கி கணக்குகளையும் முடக்க வருமானவரித் துறையினர் தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. சாதாரணமாக ரெய்டு நடக்கும் என நினைத்த நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகளை மிரட்டியதும், ரெய்டில் ஈடுபட விடாமல் தடுத்ததும், அவர்களை கோபப்படுத்தி உள்ளதாகவும் இதனால் வருமானவரித்துறையினரை அடுத்து மத்திய அரசு இதில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.