Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க'வை விழுங்க துவங்கிய செந்தில்பாலாஜி - சவுக்கு தரும் பகீர் தகவல்கள்!

தி.மு.கவை விழுங்க துவங்கிய செந்தில்பாலாஜி - சவுக்கு தரும் பகீர்  தகவல்கள்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  2 Jun 2023 8:26 PM IST

எட்டு நாள் ஆகியும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இடங்களில் ரெய்டு முடியாமல் தொடர்ந்து வருவது திமுகவில் அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் வேலை வாங்கித் தருகிறேன் என பல கோடி ரூபாய் மோசடி செய்தது, இந்த ஆட்சி காலத்தில் மின் துறை மற்றும் ஆயத்துறை தீர்வு அமைச்சராக இருந்து கொண்டு டாஸ்மாக்குகளின் 10 ரூபாய் பாட்டிலுக்கு அதிகமாக வாங்கியது, சட்டவிரோதமாக பார்களை நடத்தியது, கரூர் கம்பெனி என்ற பெயரில் டாஸ்மாக் ஊழியர்களின் மிரட்டி பணம் பறித்தது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் செந்தில் பாலாஜியை சுற்றியே நகர்ந்துள்ளது.

மேலும் கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக அமைச்சரவையில் இருந்தபோது செய்த சட்டவிரோத நடவடிக்கைகளும், தற்பொழுது திமுகவில் மாறி அமைச்சரான பிறகு செந்தில் பாலாஜி செய்த பண பரிமாற்றங்களும் வருமானவரி துறையினர் கழுகு போல் கண்கானித்துவந்ததன் காரணமாக கடந்த வாரம் வருமானவரித்துறையினர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமான 40 இடங்களில் ரெய்டு நடத்த ஆரம்பித்தனர். முதல்வர் ஊரில் இல்லாத நேரத்தில் இந்த ரெய்டு துவங்கியதால் திமுகவினர் அதிர்ந்தனர். குறிப்பாக செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் ஏதாவது செய்ய வேண்டுமே என முனைப்பு காட்டி ரெய்டுக்கு வந்த வருமானவரித் துறையினர் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனை அடுத்து மத்திய அரசு தலையிட்டு பாதுகாப்பிற்காக சிஐஎஸ்எப் படைகளை அனுப்பி வைத்தது 40 இடங்களில் ஆரம்பித்த ரெய்டு பின்னாளில் அதிகரித்து அதிகரித்து 200 இடங்களாக சென்றது.

இந்த நிலையில் திமுகவின் அமைப்பு செயலர் ஆர் எஸ் பாரதி இது அரசியல் காழ்புணர்ச்சியால் நடத்தப்படும் ரெய்டு என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதுதான் அரசியல் விமர்சகர்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும், சந்தேகத்தை வரவழைத்தது. அதாவது கடந்த மாதத்தில் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு நெருக்கமான இடங்களில் ரெய்டு வந்த போது அதிகாரப்பூர்வமாக திமுகவிலிருந்து எதுவும் பேசப்படவில்லை. தனித்தனியாக தான் திமுகவிலிருந்து கண்டனங்கள் எழுந்தன, ஆனால் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி இது குறித்து எதுவும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி பேசவில்லை.

அது மட்டும் அல்லாமல் திமுகவில் நீண்ட காலமாக இருந்து வரும் அண்ணாநகர் எம்எல்ஏ மோகனின் வீட்டில் ரெய்டு நடக்கும் பொழுதும் ஆர் எஸ் பாரதி அது குறித்து எதுவும் பேசவில்லை. இது மட்டும் அல்லாமல் உதயநிதிக்கு நெருக்கமான இடங்களை அமலாக்கத்துறை குறிவைத்து ரெய்டு நடத்தியபோதும் இது குறித்து ஆர் எஸ் பார்வை எதுவும் பேசவில்லை. இப்படி முதல்வர் ஸ்டாலின் மருமகனுக்கு நெருக்கமான இடங்கள், முதல்வரின் மகனுக்கு நெருக்கமான இடங்கள். பல வருட காலம் திமுகவில் இருக்கும் விசுவாசிக்கு நெருக்கமான இடங்கள் இப்படி பல்வேறு இடங்களில் ரெய்டு நடக்கும் போது பேசாத ஆர் எஸ் பாரதி ஏன் இப்பொழுது பேசுகிறார் என அரசியல் விமர்சனங்களும் எதிர்க்கட்சிகளும் கேள்வியை முன்வைத்து வந்தனர்.

இந்த நிலையில் தனியார் யூ ட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த மூத்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் செந்தில் பாலாஜி திமுகவை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றி விட்டார் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து சவுக்கு சங்கர் கூறியதாவது, 'செந்தில் பாலாஜி திமுகவை கைப்பற்றி விட்டார். இதை நான் அடித்து சொல்கிறேன் முதல்வர் ஊரில் இல்லாத நேரத்தில் ஒருவர் வீட்டில் அதாவது செந்தில் பாலாஜி தான் அமைச்சராக இருக்கிறார், ஆனால் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது இன்னும் கூறப்போனால் அசோக் திமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது என்றே சொல்லலாம் இப்படி திமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாதவர் வீட்டில் ரெய்டு வந்தால் எதற்காக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி குரல் கொடுக்க வேண்டும்?

செந்தில் பாலாஜி தான் முதல்வரின் உதவியாளர் தினேஷ் மூலமாக ஆர் எஸ் பாரதி இதை பேட்டி கொடுக்க சொல்லி இருக்க வேண்டும். ஏனெனில் செந்தில் பாலாஜி திமுகவில் இருக்கக்கூடிய பலருக்கு மாதம் படி அளந்து வருகிறார், பணம் கொடுத்து வருகிறார். அவர் முதல்வரின் உதவியாளர் தினேஷையும் நன்கு கவனித்து வருகிறார். இதன் காரணமாக தினேஷ் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக பேசுங்கள் என ஆர் எஸ் பாரதியிடம் கூறியுள்ளார். இது மட்டுமல்லாமல் செந்தில் பாலாஜி அதிகாரிகளுக்கும் பணம் கொடுத்து வருகிறார், தற்பொழுது இந்த ஒட்டுமொத்த திமுக ஆட்சியில் சிஸ்டமே செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக பேசுவதை கவனித்தீர்களா நீங்கள்? என நெறியாளரிடம் கேட்டார். அது மட்டுமல்லாமல் ஆர்எஸ் பாரதி நியாயமாக பார்த்தால் யாருக்கு குரல் கொடுத்திருக்க வேண்டும் என்றால் அண்ணா நகர் எம்எல்ஏ மோகனின் வீட்டில் ரைடு வரும் போது குரல் கொடுத்திருக்க வேண்டும் அது மட்டும் அல்லாமல் முதல்வரின் மகன் அமைச்சரின் நெருக்கமான இடங்களில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தும் பொழுது குரல் கொடுத்திருக்க வேண்டும். அப்பொழுது குரல் கொடுத்திருந்தால் நீ உண்மையான திமுக காரர்.

ஆர் எஸ் பாரதி ஆனால் அப்பொழுதெல்லாம் குரல் கொடுக்காமல் இப்படி செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இடங்களில் ரெய்டு என்றவுடன் ஏன் அலறடித்துக் கொண்டு குரல் கொடுக்க வேண்டும்? இப்பொழுது தெரிகிறதா ஒட்டுமொத்த திமுக கட்சியையும் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக செந்தில் பாலாஜி அபகரித்து விட்டார் என? இது கண்டிப்பாக ஒரு போராட்ட காலம் தான் திமுகவிற்கு ஏனெனில் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் கூட இன்று செந்தில் பாலாஜியை தாண்டி எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். ஸ்டாலின் குடும்பத்தினர் கூட சொல்வதைக் கூட கேட்காமல் முதல்வர் தற்பொழுது அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுவதை கேட்கும் அளவிற்கு நிலைமை தற்பொழுது ஏற்பட்டுள்ளது. இது அனைத்தும் திமுகவை செந்தில்பாலாஜியிடம் பறி கொடுப்பதற்கான அறிகுறிகள் தான்! ஏனெனில் இன்று முதல்வர் சொல்வதை திமுகவில் கேட்பதைவிட செந்தில் பாலாஜி சொல்வதை திமுகவில் கேட்பதுதான் அதிகம்' என சவுக்கு சங்கர் கூறியது பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News