Kathir News
Begin typing your search above and press return to search.

சிறையில் செந்தில்பாலாஜி - கனிமொழி போட்ட அசால்ட்டு ஸ்கெட்ச்!

சிறையில் செந்தில்பாலாஜி - கனிமொழி போட்ட அசால்ட்டு ஸ்கெட்ச்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  15 Jun 2023 11:15 AM IST

ஒட்டுமொத்த அமைச்சரவையும் ஓமந்தூராரில் குவிந்திருக்க கனிமொழி போட்ட தனி ஸ்கெட்ச்!

திமுகவின் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தான் தற்பொழுது தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை ஐந்து கட்சி மாறியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது வேலை வாங்கித் தருகிறேன் என பணம் மோசடி செய்த விவகாரம் மற்றும் இன்ன பிற வழக்குகள் ஆகியவற்றின் எல்லாம் சேர்த்து செந்தில் பாலாஜி மீது பண மோசடி வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் அமலாக்க துறையின் தலையீடு வேண்டும் என நீதிமன்றத்தின் வழக்கு தொடர்ந்ததை தொடர்ந்து அமலாக்கத்துறை மீதான தடையை நீதிமன்றம் நீக்கியது.

இதனை தொடர்ந்து நேற்று காலை 8 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருங்கிய இடங்களில் அதிரடி ரெயிடை தொடங்கினார். செந்தில் பாலாஜி இல்லாத நேரமாக பார்த்து அதிரடி ரெயிடை துவங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பயந்து வாக்கிங் சென்ற அமைச்சர் செந்தில்பாலாஜி வாடகை காரை பிடித்து ஓடி வந்தார். வீட்டுக்கு ஓடி வந்ததும் அமலாக்க துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி காலையில் வாக்கிங் சென்ற கருப்பு பனியன், ட்ராக் சூட்டை கூட கழட்ட விடாமல் அமர வைத்து கேள்வி மேல் கேள்விகளால் துளைத்து எடுத்தனர். அதிகாரிகள் ஒரு பக்கம் ஆவணங்கள் மற்றும் கோப்புகள் போன்றவற்றை பரிசோதிப்பது, மறுபக்கம் செந்தில் பாலாஜியை நடுகாலில் சோபாவில் உட்கார வைத்து தொடர்ச்சியான கேள்விகளால் துளைத்தெடுப்பது என அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியில் இறங்கினர்.

இது போதாது என கிடைத்த ஆவணங்களை வைத்துக்கொண்டு ஒரு குழுவினர் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி என் தலைமைச் செயலக அலுவலக அறைக்குள் ரெய்டு நடத்த நுழைந்தனர். இது மட்டுமல்லாமல் செந்தில் பாலாஜியின் அலுவல் சார் உதவியாளர் விஜயகுமாரை தனியாக அழைத்துச் சென்று எங்கு வைத்து விசாரிக்கிறோம் என தெரியாத அளவிற்கு விசாரித்து வந்தனர். இப்படி தொடர்ச்சியாக அமலாக்க துறையின் கிடுக்குபிடியில் செந்தில் பாலாஜி மாட்டியது திமுகவை அல்லோலகல்லோலப்படுத்தியது. உடனடியாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மற்றும் பரந்தாமன் ஆகியோர் அலறியடித்துக்கொண்டு செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு சென்று செந்தில் பாலாஜியின் வீட்டு கதவில் அருகிலேயே 2 மணி நேரம் காத்திருந்தனர்.

அவர்களையெல்லாம் அமலாக்கத்துறை மதிக்கவில்லை மேலும் இரவோடு இரவாக செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவார் என தகவல் தெரிந்ததும் ஒவ்வொரு திமுகவின் மூத்த தலைவர்களும் குவிய தொடங்கினர். இரவு 2:30 மணிக்கு செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவார் என தெரிந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் படுத்துக்கொண்டு அழுதது அதிகாரிகளை செந்தில்பாலாஜி காலால் எட்டி உதைத்ததும் குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், இதனால் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, அமைச்சர் கே என் நேரு, பெரிய கருப்பன் போன்ற மூத்த தலைவர்கள் அனைவரும் கிளம்பி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜியை பார்த்துக்கொண்டார். இப்படி ஒட்டுமொத்த திமுகவும் செந்தில் பாலாஜிக்காக கொதிக்கும் வேளையில் ஒட்டுமொத்த இடதுசாரி கட்சிகளும் செந்தில் பாலாஜிக்காக குரல் கொடுக்கும் வேலையில் திமுகவில் இருக்கும் ஒரே தலைவர் செந்தில் பாலாஜிக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக தன் வேலைகளை பார்த்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலினின் சகோதரியும், திமுகவின் எம்.பியுமான கனிமொழி எதற்கெடுத்தாலும் தனது கண்டன அறிக்கைகள் தனது கருத்துக்களை கூறி வருவார் ஆனால் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடைபெற்றதிலிருந்து இதுவரை அது குறித்து ஏதும் கருத்து கூறவில்லை. மேலும் கடந்த ஆட்சிக்காலத்தில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த பொழுது செந்தில்பாலாஜியை கனிமொழி அந்த அளவிற்கு திட்டி உள்ளார். தற்பொழுது செந்தில் பாலாஜி அமைச்சரவையில் முக்கிய லாபியில் வலம் வந்த பொழுது கூட கனிமொழி ஆதரவாளர்களை ஓரங்கட்டி வைத்தார் என கூறப்படுகிறது. இப்படி உட்கட்சி மோதலால் தான் செந்தில் பாலாஜி சிக்கினால் சிக்கட்டும் என கனிமொழி காத்திருந்ததாகவும் தெரிகிறது, இதன் காரணமாகவே கனிமொழி ஒரு கருத்து கூட வெளியிடாமல் ஒரு சின்ன ட்வீட் கூட செந்தில் பாலாஜிக்கு எதிராக போடாமல் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News