சமூகநீதி அரசுன்னு பேச வாய் கூசலை? - அமர் பிரசாத் ரெட்டி சாட்டையடி கேள்வி!
By : Mohan Raj
பாஜக மாநில செயலாளர் SG சூர்யா கைது விவகாரத்தில் திமுக அரசை கடுமையாக சாடி உள்ளார் அமர் பிரசாத்ரெட்டி.
பாஜக மாநில செயலாளர் SG சூர்யா கம்யூனிஸ்ட் எம்பி வெங்கடேசனிடம் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் கூறியதன் விளைவாக ஏற்பட்ட மலக்குழி மரணத்தை குறிப்பிட்டு ஒரு கேள்வி எழுப்பி இருந்தார்.
அந்த அறிக்கையை மையமாக வைத்து பாஜக மாநில செயலாளர் SG சூர்யா மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இரவோடு இரவாக திமுக அரசின் காவல்துறை SG சூர்யாவை கைது செய்தது. தற்பொழுது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு வழக்கை சந்தித்து வரும் SG சூர்யா தற்பொழுது காவல்துறை காவலில் உள்ளார்.
இந்த நிலையில் SG சூர்யாவின் கைதிற்கு பலரும் தங்கள் கண்டனக் குரல்களையும், திமுக அரசுக்கு எதிராக கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். எந்த நிலையில் பாஜகவின் அமர் பிரசாத்ரெட்டி எழுப்பி உள்ள கேள்வியில் திமுக அரசை கடுமையாக சாடி உள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கேள்விகள்:
1. 12வது வார்டு கவுன்சிலர் விசுவநாதன் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் இல்லையா?
2. பாதிக்கப்பட்டவரை கையால் சுத்தம் செய்ய அவர் அழுத்தம் கொடுக்கவில்லையா?
3. இந்த FIR மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
4. இச்சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது, தி.சு.வெங்கடேஷ் எம்.பி., கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரைக் கேள்வி கேட்பதில் என்ன தவறு?
5. கடலூருக்கு பதிலாக SG சூர்யா மதுரை என்று குறிப்பிட்டுள்ளார். இது ஒரு பெரிய தவறா? SG சூர்யா avl குறிப்பாக குற்றம் பற்றி கேள்வி எழுப்பியதால் இது தவறாக வழிநடத்துகிறது.
6. கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதா?
திமுக சமூகநீதியை பற்றி பேசுகிறது ஆனால் நேரம் வரும்போது அவர்கள் மௌனமாகிவிடுகிறார்கள் அல்லது ஒரு யார் மீதோ பழி போட்டுவிட்டு தப்பித்துக்கொள்கிறார்கள். பதில் கூறுங்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
SG சூர்யா கைது விவகாரம் தமிழக அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுளது குறிப்பிடத்தக்கது.