இப்படித்தான் எம்.ஜி.ஆரை அரசியல்ல அடிச்சீங்க.... அப்புறம் என்னாச்சு...? - நாங்க வறோம் பாரு - வானதி சீனிவாசன்!
By : Mohan Raj
'எம்ஜிஆரை அடிச்சிங்க கடைசி வரைக்கும் பதவியிலே உட்கார முடியல, இப்போ எங்களை அடிக்கிறீங்க! பார்க்கலாம்' என SG சூர்யா கைதுக்கு வானதி சீனிவாசன் ஆதரவாக இறங்கியுள்ளார்.
பாஜக மாநில செயலாளர் SG சூர்யா கைது செய்யப்பட்ட விவகாரம் தற்போது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன் மீது கேள்வி எழுப்பிய காரணத்திற்காக இரவோடு இரவாக அவரது இல்லத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
இது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வானதி சீனிவாசன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, 'பாஜக மாநிலச் செயலாளர் தம்பி SG Suryah நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஊழல் வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த பிறகு, திமுக அரசு, என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவுக்கு பதற்றத்தில் உள்ளது.
1972-ம் ஆண்டில் எம்ஜிஆர் அவர்கள் அதிமுகவை தொடங்கியபோது ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக இப்படிதான் கோரத்தாண்டவம் ஆடியது. ஆனால், கடைசியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். எம்ஜிஆர் அவர்கள் உயிரோடு இருக்கும் முதலமைச்சர் பதவி பற்றி திமுகவினரால் கனவு கூட காண முடியவில்லை.
திமுகவினர் எப்போதுமே ஜனநாயகம், பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை பற்றி வகுப்பெடுப்பார்கள்ஆனால், எல்லாம் மற்றவர்களுக்குதான். அதிகாரம் கைக்கு வந்தால் திமுகவினர் சர்வாதிகாரிகளாக மாறி விடுவார்கள். அதுதான் இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திமுக மற்றும் அதன் சர்வாதிகார செயல்பாடுகளை ஜனநாயக முறையில் விமர்சித்ததற்காக தம்பி எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டிருக்கிறார். எந்தவொரு அடக்குமுறைக்கும் பாஜக தொண்டர்கள் அஞ்ச மாட்டார்கள்' என குறிப்பிட்டுள்ளார்.