Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லியில் இருந்து வந்த தகவல்.. அலறி அடித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்த திமுக..

டெல்லியில் இருந்து வந்த தகவல்.. அலறி அடித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்த திமுக..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  20 Jun 2023 2:25 AM GMT

திமுகவின் முன்னாள் தலைமை கழக பேச்சாளராக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இருந்து வருகிறார். இவர் பல்வேறு மேடைப்பேச்சுக்களின் போது பாஜகவையும், பாஜகவை சார்ந்த மகளிரையும் மிகவும் கடுமையாக கீழ்த்தரமாக பேசு இருக்கிறார். குறிப்பாக இந்த ஆண்டு ஜனவரியில் திமுக ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிருஷ்ணமூர்த்தியின் கருத்து சர்ச்சையை கிளப்பியது. “கவர்னர் தனது சட்டசபை உரையில் அம்பேத்கரின் பெயரை உச்சரிக்க மறுத்தால், அவரைத் தாக்க எனக்கு உரிமை இல்லையா? தமிழக அரசு ஆற்றிய உரையை நீங்கள் படிக்கவில்லை என்றால், காஷ்மீருக்குச் செல்லுங்கள், நாங்கள் பயங்கரவாதிகளை அனுப்புவோம், அதனால் அவர்கள் உங்களை சுட்டுக் கொன்றுவிடுவார்கள்" என்று அவர் கூறினார்.


தமிழக அரசுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாத கவர்னர் முதல் பாஜக கட்சி தொண்டர்கள் மற்றும் பாஜக கட்சியை சேர்ந்த மகளிரை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சித்து இருக்கிறார். இதன் காரணமாக திமுக கட்சி நிர்வாகம் இவரை ஏற்கனவே தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது. பிறகு மீண்டும் தற்காலிக இடை நீக்கத்தை ரத்து செய்து இவரை கட்சியில் சேர்த்துக் கொண்டது, தற்போது இரண்டாவது முறையாக இவர் பாஜகவையும், கவர்னரையும் அவமதிக்கும் வகையில் பேசி இருக்கிறார்.


அண்மையில் சென்னை பெரம்பூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பாஜகவை சேர்ந்தவரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.

அதில் மிகவும் தரம் தாழ்ந்த கருத்துக்களை பயன்படுத்தி விமர்சித்து இருக்கிறார் எனவும் பொதுவெளியில் மேடைப் பேச்சின் போது கடைப்பிடிக்க வேண்டிய கண்ணியத்தை திமுக எப்பொழுதும் கடைபிடித்து கிடையாது என பாஜக தரப்பில் கூறப்பட்டு வருகிறது.


இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். அது மட்டுமல்லாது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் குஷ்பூ அவர்களையும் தனிப்பட்ட வகையில் தரம் குறைவாக பேசி இருக்கும் காரணத்தினால் இது தொடர்பாக அவர் பேட்டி ஒன்றியம் அளித்திருக்கிறார்.

தற்போது டெல்லியின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் குஷ்பூ அவர்களை திமுக இரண்டாவது முறையாக சீண்டி பார்க்கிறது. இந்த ஒரு காரணமாக தமிழகத்தில் மட்டுமல்லாது தேசிய அளவில் இந்த ஒரு பிரச்சனை எடுத்துச் செல்லப்படுகிறது.


ஏற்கனவே திமுக நிர்வாகிகள் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையினர் போன்றோரின் ரெய்டுகளை சந்தித்து வரும் ஒரு சூழ்நிலையில், கழகப் பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சின் காரணமாக மீண்டும் திமுக வம்பில் சிக்கி இருக்கிறது, எதற்கு மீண்டும் ஒரு பிரச்சினையை நாமே தலையில் தூக்கி போட வேண்டும் என்ற காரணத்தினால் கழக பேச்சாளராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நிரந்தரமாக நீக்கம் செய்துள்ளனர்.

பாஜக ஏற்கனவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை போன்று தற்பொழுது மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தும் என்ற ஒரு அச்சம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் குஷ்பூ அவர்களை தவறாக சித்தரித்து பேசியதற்கு திமுக விஷயத்தில் டெல்லியும் தலையிடும் என்ற ஒரு அச்சம் காரணமாக உடனடியாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நீக்கி கைது நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது திமுக என்ற தகவல்களும் வெளிவந்து இருக்கிறது. மேலும் தற்போது அடுத்தடுத்த அமைச்சர்கள் பெயர்கள் ரெய்டு பட்டியலில் இருப்பதால் எதற்கு வீண் வம்பு என திமுக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி விவகாரத்தில் உடனே நடவடிக்கை எடுத்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News