Kathir News
Begin typing your search above and press return to search.

நான் திமுககாரன்! அறிவாலயம் வரைக்கும் காண்டாக்ட் இருக்கு: உன்ன காலி பண்றேன் பாக்குறியா? பி.டி.ஓவை மிரட்டிய ஊராட்சி செயலர்!

நான் திமுககாரன்! அறிவாலயம் வரைக்கும் காண்டாக்ட் இருக்கு: உன்ன காலி பண்றேன் பாக்குறியா? பி.டி.ஓவை மிரட்டிய ஊராட்சி செயலர்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Jun 2023 9:28 AM IST

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் ஊராட்சி செயலராக இருப்பவர் ஜெயசீலன்.

இவர் திமுக ஆதரவாளர் என கூறப்படுகிறது. பல இடங்களில் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார்.

ஜூன் 21இரவு திருவாலங்காடு பி.டி.ஓ பாலசுப்ரமணியத்தை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார்.

தான் பேசியதை ரெக்கார்ட் செய்து அவரே பி.டி.ஓ அலுவலக ஊழியர்கள் உள்ள வாட்ஸாப் குரூப்பில் பதிவிட்டுள்ளார்.

அதில் ஊராட்சி செயலர் ஜெயசீலன், அரிச்சந்திராபுரம் ஊராட்சி செயலர் சிவகுமாரை ஏன் இடமாற்றம் செய்தீர்கள்?

அதற்கு எவ்வளவு பணம் லஞ்சமாக வாங்கினீர்கள்? நான் தி.மு.க., காரன். நான் சொல்வதைத் தான் தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் கேட்பார்கள். பதவியில் இருந்து உன்னை துாக்கி விடுவேன் என பேசியுள்ளார்.

இதுகுறித்து திருவாலங்காடு பி.டி.ஓ., பாலசுப்ரமணியம் பேசுகையில், அவர் குடிபோதையில் பேசினார் என்பது தெரிந்தது.

அவர் இதற்கு முன் இருந்த பி.டி.ஓக்களை மிரட்டிய சம்பவத்தால், அவர் தண்டிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை சரியில்லாததால் முத்துக்கொண்டாபுரம் ஊராட்சி செயலர் மில்லர் சின்னம்மாபேட்டை ஊராட்சிக்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு பதிலாக சிவக்குமார் முத்துக்கொண்டாபுரத்திற்கு பணி மாறுதல் செய்யப் பட்டுள்ளனர். இடமாறுதல் தொடர்பாக எந்த தவறும் நடக்கவில்லை என கூறினார்.

Input From: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News