Kathir News
Begin typing your search above and press return to search.

அண்ணாமலைதான் அடுத்த சி.எம் - போலீஸ் வேலையை வீசிவிட்டு அண்ணாமலைக்காக வரும் காவலர்...!

அண்ணாமலைதான் அடுத்த சி.எம் - போலீஸ் வேலையை வீசிவிட்டு அண்ணாமலைக்காக வரும் காவலர்...!
X

Mohan RajBy : Mohan Raj

  |  17 Aug 2023 11:44 AM IST

அண்ணாமலை போல் தேசத்திற்காக பாஜகவில் இணைய தயார் என வரும் ராமநாதபுரம் காவலர்...!

கடந்த 2 வாரங்களாக தமிழகத்தில் எண் மக்கள் யாத்திரை கோலாகலமாக நடந்து வருகிறது ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஆரம்பித்த இந்த யாத்திரை தற்பொழுது தென் தமிழகத்தின் முக்கியமான பகுதிகளில் வளம் வருகிறது.

அண்ணாமலை செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் யாத்திரையில் அலைவதுவதாகவும் அண்ணாமலையிடம் பேசுவதற்கும், அண்ணாமலையிடம் கை கொடுப்பதற்கும் அண்ணாமலையிடம் குறைகள் கூறுவதற்கும் என மக்கள் வரிசை கட்டி நிற்பதாகவும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இது மட்டுமல்லாமல் யாத்திரையில் மக்கள் கூட்டத்தில் குறிப்பாக பெண்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் என அண்ணாமலையின் யாத்திரைக்கு ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருவதாக அரசியல் பார்வையாளர்களும் கூறுகின்றனர். இந்த யாத்திரை தமிழகத்தில் பாஜகவிற்கு ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் மேலும் தமிழக அரசியலில் தமிழக பாஜகவிற்கு முக்கியமான இடத்தை பெற்று தரும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் இருந்து வேறு அண்ணாமலை யாத்திரைக்கு பாராட்டுகள் குவிவதாகவும் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இப்படி இருக்கும் பொழுது காவலர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் அண்ணாமலையை போல் நானும் பாஜகவில் இணைந்து தேசத்திற்காக பணியாற்ற போகிறேன் எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனில் கார்த்திக் காவலராக பணியாற்றுகிறார். ராமநாதபுரம் பா.ஜ., மாவட்ட தலைவர் தரணி முருகேசனை சந்தித்த அவர் பாஜகவில் இணைய உள்ளதாக கூறினார்.

சமூகமும், நாடும் வளர்ச்சி அடைய வேண்டும். இதுகுறித்து சமூக ஆய்வில் ஈடுபட்டுள்ளேன்.அந்த அறிக்கையை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையிடம் வழங்க உள்ளேன் எனவும் அடுத்த முதல்வர் அண்ணாமலை தான். அவருக்கு உதவ போலீஸ் தேவை. அதற்காகத்தான் பதவியை ராஜினாமா செய்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

அண்ணாமலை தான் அடுத்த சி.எம் என கூறி பாஜகவில் இவர் இணைத்து பரபரப்பாக பேசப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News