Kathir News
Begin typing your search above and press return to search.

சி.எம் வந்தா எனக்கென்ன? முதல்வர் மீட்டிங்கை அலட்சியமாக புறக்கணித்துவிட்டு மலேசியா பறந்தாரா பி.டி.ஆர்?

சி.எம் வந்தா எனக்கென்ன? முதல்வர் மீட்டிங்கை அலட்சியமாக புறக்கணித்துவிட்டு மலேசியா பறந்தாரா பி.டி.ஆர்?
X

Mohan RajBy : Mohan Raj

  |  21 Aug 2023 7:29 AM GMT

முதல்வரின் மீட்டிங்கை புறக்கணித்தாரா பிடிஆர்...? அடுத்த மோதல் ஆரம்பமா..?

வெளியான இரண்டு ஆடியோக்களாக ரொம்ப காலமாக இருந்த கட்சியிலே மதிப்பு போய் மரியாதையும் போய் ஒதுக்கப்பட்ட நிலைமையை சந்தித்து வருகிறார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

தமிழகத்தில் ஆளும் பொறுப்பை ஏற்றுள்ள திமுகவின் தலைவரான முதல்வர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினை பற்றியும் மருமகன் சபரீசனை பற்றியும் தெள்ளத் தெளிவாக உண்மைகளை போட்டு உடைத்தார் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்.

அது அவரது முதல் ஆடியோ பதிவு இரண்டாவதாக வெளியான ஆடியோ பதிவில் பாஜகவில் மேற்கொள்ளப்படும் கட்சி நடவடிக்கைகளை பற்றி பாராட்டி விட்டு தன் கட்சியில் இருக்கும் குறைபாடுகளையும் இவர்கள் தான் கட்சியின் முக்கியவர்கள் இவர்கள் கூறுவது தான் இறுதியில் நடக்கும் என்பதை எடுத்துரைத்து அடிமட்ட தொண்டர்களுக்கு திமுகவில் முன்னேறுவதற்கான வாய்ப்பே இல்லை என்பதை எடுத்துரைத்திருந்தார்.

இந்த இரண்டு பதிவுகளிலும் இருக்கும் குரல் தன்னுடையது அல்ல என்று பி டி ஆரால் கூறப்பட்டாலும் அதற்கு செவி சாய்க்காமல் அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்தி அதிக செல்வாக்கு மிகுந்த நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அவரை மாற்றினார் முதல்வர் மு க ஸ்டாலின்.

அதற்குப் பிறகு எந்த ஒரு திமுக நிகழ்ச்சி என்றாலும் பி டி ஆர் முன்னிலைப்படுத்தப்படுவது இல்லை ஏன் கலந்து கொள்வது கூட இல்லை அழைப்புகள் வந்தால் தானே கலந்து கொள்வதற்கு என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது. இருப்பினும் நாம் கூறியதை கேட்காமல் கடந்த ஆட்சியில் ஊழல்வாதி என்று கூறிய அவரையே தற்போது காப்பாற்றும் வகையில் திமுக தலைமை சிலவற்றை செய்கிறது என்ற கோபத்திலும் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது அவரை சந்திக்க பி டி ஆர் செல்லவில்லை என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலப்போக்கில் அனைத்து மாறிவிடும் என்று நினைத்தால் தற்போது கட்சியில் இருக்கும் நிர்வாகிகளே பி டி ஆர் யை ஒதுக்குவதாகவும் அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று முன்தினம் மதுரை பயணமாகியுள்ளார். தென்மண்டல பூத் ஏஜென்ட் களை சந்திப்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ள மதுரை ராமநாதபுரம் பயணமான முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று மதுரை முனிசாலை பகுதியில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் பின்னணி பாடகர் ஆக இருந்த கலை மாமணி டி எம் சௌந்தரராஜன் அவர்களின் திருவுருவ சிலையை திறந்து வைத்தார்.

கலைமாமணி டி எம் சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதத்தில் இந்த சிலை திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் திமுகவின் முக்கிய அமைச்சர்களான தங்கம் தென்னரசு, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், பி. மூர்த்தி, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் டி. நாகராஜன் மற்றும் திமுகவின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் ஆனால் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளவில்லை.

மேலும் முதல்வர் மதுரை வரும் வேளையில் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மலேசியா சென்றுவிட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இலாக்கா மாற்றிய கோபத்தில் பிடிஆர் இருந்த காரணத்தினால் தற்பொழுது முதல்வர் நிகழ்ச்சிகளை பி டி ஆர் புறக்கணிக்கிறார். இதனால் மோதல் முற்றியுள்ளது விரைவில் தகவல் தொழில்நுட்பத்துறை பதவியும் பி டி ஆரிடமிருந்து பறிக்கப்படும் எனவும் சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News