Kathir News
Begin typing your search above and press return to search.

தலைவர் பதவிக்கு வேட்டு...! டெல்லியில் அழுது அடம்பிடித்தாரா கே.எஸ்.அழகிரி...?

தலைவர் பதவிக்கு வேட்டு...! டெல்லியில் அழுது அடம்பிடித்தாரா கே.எஸ்.அழகிரி...?

Mohan RajBy : Mohan Raj

  |  21 Aug 2023 7:33 AM GMT

அழாத குறையாக டெல்லியில் காலில் விழுந்த அழகிரி...! தலைவர் பதவியை காப்பாற்ற இப்படியெல்லாம் பண்ணுவாங்களா...?

தமிழகத்தில் காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி கடந்த 2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார் மேலும் அவரது பதவி காலம் 2022 ஆம் ஆண்டிலேயே முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் மேலிடம் தமிழகத்தில் காங்கிரஸ் தலைவரை மாற்றாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் திமுகவிற்கும் பாஜகவுக்கும் தான் வாக்குவாதங்கள் நீடித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் இருந்து வருவது காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது மேலும் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் அதனை தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் தலைரை தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் தலைமை ஆர்வம் காட்டியதால் தமிழகத்தில் காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதில் கோட்டை விட்டதாக விமர்சனங்கள் எழுந்து வந்தன.

இந்நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் தலைவரை மாற்றுவதற்கு டெல்லியில் காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளரவே இல்லை இதற்கு காரணம் தமிழகத்தில் காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே எஸ் அழகிரி தான் எனவே தமிழகத்தில் காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்ட நிலையில் இதனை அறிந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தனது ஆதரவாளர்களுடன் டெல்லிக்கு சென்று அங்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு பெற்று தனது கருத்துக்களை வழங்கினார்.

மேலும் தமிழகத்தில் இந்த தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு ஜோதிமணி ,கார்த்தி சிதம்பரம், செல்வ பெருந்தகை பல பேர் இருக்கும் நிலையில் கே எஸ் அழகிரி தமிழக காங்கிரஸ் கமிட்டி பதவியில் இருந்து தூக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேச்சு அடிபட்டு வருகிறது.

இந்நிலையில் தான் கே எஸ் அழகிரி 11 எம்எல்ஏ மூன்று எம்பிக்கள் மற்றும் 30 மாவட்டச் செயலாளர் உடன் ஆதரவாளர்களை திரட்டிக்கொண்டு பெங்களூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களை சந்திக்க சென்றுள்ளார்.

கே எஸ் அழகிரி ஆரம்பத்தில் தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்கு ஆதரவாளர்களுடன் சென்று பேசிப்பார்த்த நிலையில் அது முடியாத பட்சத்தில் தற்போது காலில் விழுந்து அழாத குறையாக தமிழகத்தில் காங்கிரஸ் பதவியில் நீடிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக சில தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும் தமிழகத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்து கே எஸ் அழகிரி ஆற்றிய பணிகளை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் பகிர்ந்து கொண்டதுடன் தற்போது நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற நேரத்தில் தலைவரை மாற்றினால் அது வருகின்ற தேர்தலில் எதிரொளிக்கும் மேலும் கேஸ் அழகிரி ஆதரவாளர்களான எம்பிகள் மட்டும் எம்எல்ஏவுக்கு அது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதால் இந்த பதவியில் நீடிக்க அனுமதிக்குமாறு கே எஸ் அழகிரி கேட்டுக்கொண்டார் மேலும் கே எஸ் அழகிரி தலைவராக பதவியேற்ற ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நிலையில் அவருக்கு எதிராக போட்டியில் இருப்பவர்கள் தற்போது தலைவர் பதவியை மாற்றுவதற்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் கே எஸ் அழகிரி தான் தனது ஆதரவாதவர்களை வைத்து பிரச்சனை செய்த வருவதாக கூறுகின்றனர்.

இவ்வாறு கேஎஸ் அழகிரி பதவியை தக்க வைத்துக் கொள்வதற்கு கேட்டு பார்த்தும் வேலைக்காகாத நிலையில் தற்போது அழாத குறையாக கெஞ்சுகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் கமெண்டுகளாக பறக்கிறது...

Next Story
கதிர் தொகுப்பு
Trending News