Kathir News
Begin typing your search above and press return to search.

அமேதி தொகுதிக்கு நூல் விட்டு மீண்டும் ஸ்மிரிதி ராணியிடம் அசிங்கப்பட்ட ராகுல் காந்தி..!

அமேதி தொகுதிக்கு நூல் விட்டு மீண்டும் ஸ்மிரிதி ராணியிடம் அசிங்கப்பட்ட ராகுல் காந்தி..!

Mohan RajBy : Mohan Raj

  |  22 Aug 2023 5:02 AM GMT

ஸ்மிருதி ராணியிடம் வாங்கி கட்டிக் கொண்ட காங்கிரஸ்... மீண்டும் அமேதியை குறிவைத்து அசிங்கப்படவரும் ராகுல்...

நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் 8 மாதங்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் அதற்காக தீவிரமாக வேலைகளில் இறங்கி உள்ளனர் அதாவது எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் யார் யாரெல்லாம் போட்டியிட வேண்டும் மற்றும் தொகுதி பங்கீடுகள் குறித்த ஆலோசனைகள் கட்சிகளுக்குள்ளே எடுக்கப்பட்டு வருகிறது.

இது மட்டுமல்லாமல் எந்த கட்சி எந்த கட்சியினருடன் கூட்டணி வைப்பது முதற்கொண்டு யாரை தலைவராக நியமிப்பது போன்ற வாக்குவாதங்களும் கட்சிகளுக்கு உள்ளே இருப்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் சில கட்சிகள் ஆலோசனைக் கூட்டங்கள் தேர்தல் வியூகங்களை வகுப்பது போன்ற செயல்களில் இறங்கியுள்ள நிலையில் மக்கள் மத்தியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை கொண்டு போய் சேர்ப்பதற்கு அனைத்து கட்சிகளும் பிரச்சாரங்கள் பொதுக்கூட்டங்கள் என அனைத்திற்கும் ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்திக்கும் பாஜக மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணிக்கும் இடையே கடும் போர் நடந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன அதாவது இந்த போரின் தொடக்கமே கடந்த மக்களவைத் தேர்தலில் தான் ஆரம்பித்தது என்று கூறலாம் கடந்த மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து ஸ்மிருதி ராணி போட்டியிட்ட நிலையில் ராகுல் காந்தியை வீழ்த்தி ஸ்மிருதி ராணி வெற்றியை தழுவினார் மேலும் ஸ்ருதி ராணி அமேதி தொகுதியில் வெற்றி பெற்றது அனைவர் மத்தியிலும் விமர்சனங்களாக எழுந்த நிலையில் நேரு குடும்பத்தின் வாரிசுகளை தோற்கடித்து ஸ்மிருதி ராணி வெற்றி பெற்றதால் மிகவும் பெரிதாக பேசப்பட்டு வந்தது

இந்நிலையில் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் அஜய் ராய் கூறியதாவது ராகுல் காந்தி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்ற தகவலை தெரிவித்துள்ளார் இவர் இந்த தகவலை வெளியிட்டதும் காங்கிரஸிற்கும் பாஜகவிற்கு இடையே பெரும் வாக்குவாத போர் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அஜய் ராயின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக கட்சியை சேர்ந்த முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது காங்கிரஸ் கட்சி அமேதி தொகுதியை தனி சொத்து போல எண்ணி அங்குள்ள மக்களை சுவிங்கம் போல மெல்ல பார்க்கிறது இதனால் மக்கள் அவர்களை கண்டிப்பாக மன்னிக்க மாட்டார்கள் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரஷீத், ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டால் ஸ்மிருதி ராணி தனது டெபாசிட் தொகையை கூட இலக்க நேரிடும் மேலும் அமேதி தொகுதியை விட்டு ஓடவும் செய்து விடுவோம் என்று கூறியதோடு வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டால் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் இருந்து ஓட நேரிடும் என்று கூறியதால் பாஜகவினர் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே பெரும் வாக்குவாத போர் வெடித்துள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய நிலையில் வயநாட்டு தொகுதியில் மட்டும் தான் வெற்றி பெற்றார் எனவே தற்போது ராகுல் காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட நூல் விடுகிறார் அதன் காரணமாகத்தான் சிலரை வைத்து பேசி நூல் விட்டு பார்ப்போம் என்று காங்கிரஸ் கட்சி இந்த வேலையை செய்வதாக சில அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது..

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்மிருதி ராணி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோற்று ஓட தயாராத உள்ளீர்களா என்று கேள்வியை எழுப்பியதும், பாஜகவினர் அனைவரும் இதற்கு எதிராக தங்கள் கருத்தை தெரிவித்ததும் தேசிய அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News