Kathir News
Begin typing your search above and press return to search.

உதய்ண்ணா பற்றவைத்த நெருப்பு...! திமுகவை காங்கிரஸ் கூட்டணியில் இருந்து துரத்த போடப்படும் ஸ்கெட்ச்...!

உதய்ண்ணா பற்றவைத்த நெருப்பு...! திமுகவை காங்கிரஸ் கூட்டணியில் இருந்து துரத்த போடப்படும் ஸ்கெட்ச்...!
X

Mohan RajBy : Mohan Raj

  |  9 Sep 2023 1:38 PM GMT

கிட்டத்தட்ட உறுதியான தகவல்...! அப்போ கன்ஃபார்மா...?

தமிழக முதல்வர் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாடு சனாதனத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததோடு அதனை மலேரியா டெங்கு போன்ற கொடிய நோய்களுடன் ஒப்பிட்டு சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தார்.

உதயநிதியின் இந்த கருத்திற்கு பாஜக தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்புகள் வந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி இதனை ஆதரிக்கிறதா அதற்காகத்தான் அமைதி காத்து வருகிறதா என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்ட போது இந்தியா கூட்டணியை சேர்ந்த சிவ சேனா உத்தவ் தாக்கரே, திரணாமுள் காங்கிரஸ் போன்ற கட்சி தரப்பிலிருந்து உதயநிதிக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்பட்டது. அதாவது அவர்கள் சனாதனத்தை ஆதரிப்பதாகவும் உதயநிதி பேசியது தவறு என்றும் அதற்கு நாங்கள் உடன்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

இதற்கு அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது மகனை ஆதரிக்கும் வகையில் சனாதனத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்த உதயநிதியின் கருத்து சரியானதுதான் என்ற வகையில் அவர் அறிக்கை வெளியிட்டது இந்த சமயத்தை சேர்ந்தவர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதற்கு அடுத்ததாக ஊட்டியில் நடைபெற்ற திமுக முகவர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக துணை பொது செயலாளரும் எம்பியுமான ஆ ராசா உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது பிறப்பால் ஏற்படுத்தப்படுவது அல்ல சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் ஏற்படுகிறது. அதனை எதிர்க்கும் சக்தியாக தான் திமுக திகழ்வதாகவும் முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலின் திமுகவில் இணைந்து இளைஞரணி தலைவராக பொறுப்பேற்ற பொழுது எனக்கு எவ்வளவு சந்தோஷம் இருந்தது அதைவிட அதிக சந்தோஷம் சனாதன ஒழிப்பு குறித்து அவர் கருத்துக்கள் தெரிவிக்கும் பொழுது ஏற்பட்டது. சனாதனத்தை ஒழித்தே ஆக வேண்டும் என்று அவர் கூறியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அதுமட்டுமல்லாமல் இந்த சனாதனம் கொடிய வியாதியான எய்ட்ஸ்சை உருவாக்கக்கூடிய எச்ஐவி வைரஸை போன்றது என்றும் அவர் தெரிவித்தது திமுகவிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது..

இந்த நிலையில் சனாதனம் குறித்து உதயநிதி மற்றும் தற்போது திமுக எம் பி ஆ ராசா கூறிய கருத்துக்கள் தவறானது என்றும் அதற்கு காங்கிரஸ் உடன்பட போவதில்லை என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.

அதாவது செய்தியாளர்களை சந்தித்த அவர் அனைத்து மதங்களும் சமம் என்பதையே காங்கிரஸ் நம்புகிறது, ஒரு மதத்தை மட்டும் உயர்வாக கருதி மற்றொன்றை குறைவாக கருத முடியாது. மேலும் இந்தியா கூட்டணியும் இந்திய தேசிய காங்கிரஸும் திமுக எம்பி மற்றும் உதயநிதி கூறிய கருத்துக்களை ஏற்கவில்லை, அனைத்து தொகுதிகளில் இருக்கும் அனைவரையும் அனைத்து மதத்தினரையும் சமமாக நாங்கள் மதிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். இதன் பின்னணியை விசாரித்த பொழுது இந்தியா கூட்டணியில் ராகுல் அடுத்த முறை பிரதமராக வேண்டும் என்பதற்காக மாநில கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது இப்படி பத்து ஆண்டுகளாக எதிர்க்கட்சி ஆக இருந்து வரும் காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக உதயநிதி பேசியது பிடிக்கவில்லை எனவும் இதனால் எப்படி திமுகவை அடுத்த முறை மேடையில் ஏற்ற முடியும் என காங்கிரஸ் வட்டாரங்கள் கோபத்துடன் இருப்பதாக தெரிகிறது.

இதன் வெளிப்பாடே காங்கிரஸ் தரப்பில் இருந்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்த கருத்து எனவும், இப்படி இருக்கும் வேளையில் உதயநிதி வேறு நான் கண்டிப்பாக இதைப் பற்றி இன்னும் அதிக மேடைகளில் பேசுவேன் என்று கூறியிருக்கிறார் இதனால் காங்கிரஸ் இந்தியா கூட்டத்திலிருந்து திமுகவை கழட்டி விட யோசனை மேற்கொள்ளலாம் என வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன...

Next Story
கதிர் தொகுப்பு
Trending News