Kathir News
Begin typing your search above and press return to search.

தேவையில்லாம வாய கொடுத்துட்டோமோ...? வரலாற்றில் முதல் முறையாக கூட்டத்தையெல்லாம் ரத்து செய்து ஓடிய திமுக...!

தேவையில்லாம வாய கொடுத்துட்டோமோ...? வரலாற்றில் முதல் முறையாக கூட்டத்தையெல்லாம் ரத்து செய்து ஓடிய திமுக...!

Mohan RajBy : Mohan Raj

  |  9 Sep 2023 1:44 PM GMT

தேவையில்லாமல் பேசி விட்டோமே என அதிகரித்த புலம்பல்...! உதயநிதிக்கு அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவங்கள்...!

திமுகவில் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கும் இளைஞர் அணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து தமிழக முற்போக்கு எழுத்தாளர் எழுத்தாளர் சங்கத்தில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கருத்து தெரிவிக்கிறேன் என்று தேவையில்லாமல் பேசி வம்பில் மாட்டிக் கொண்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இவ்வாறு உதயநிதி சனாதனத்தை பற்றி பேசியது தற்போது நாடு முழுவதும் பரபரப்பாகி கொண்டு வருகிறது உதயநிதியின் சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சு சனாதனத்தை பெரிதாக மதிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா முதற்கொண்டு ஏன் இந்தியா கூட்டணியில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் மம்தா பானர்ஜி ஆகியோர் வரை அனைவராலும் கண்டனத்தை பெற்று வருகிறது.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் சனாதனத்தை உதயநிதி ஸ்டாலின் டெங்கு மலேரியா போன்ற நோய்களோடு ஒப்பிட்டு பேசியதும் சனாதனத்தை பற்றி அவதூறாக பேசிவிட்டு இந்துக்களுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன் நான் பேசியது சரிதான் என்றும் இனிமேல் இப்படித்தான் பேசுவேன் இதனால் வரும் சட்ட விளைவுகளை சந்திக்க தயாராக உள்ளேன் என்று தெனாவெட்டாக பேசியதுதான் அனைவருக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது உதயநிதி ஸ்டாலினின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சை அடுத்து திண்டுக்கல்லில் நடக்க இருந்த கூட்டங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் அதற்கான எந்த அறிவிப்பும் காரணங்களோடு வெளியிடப்படவில்லை என்ற செய்தியும் வெளிவந்துள்ளது.

அதாவது விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அரசு துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் செப்டம்பர் 7ஆம் தேதி உதயநிதி தலைமையில் நடக்க இருந்தது இந்த கூட்டத்தை தொடர்ந்து விருதுநகர் கல்லூரி சாலையில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் திமுகவில் உள்ள மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியும் நடக்க இருந்ததாகவும் அதோடு சேர்த்து மாவட்ட இளைஞரணி செயற்குழு கூட்டமும் நடைபெற இருந்த நிலையில் இதற்கான ஏற்பாடுகள் கடந்த ஐந்து நாட்களாக நடந்து வந்தது.

மேலும் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் காரணம் தெரிவிக்காமல் திடீரென்று ரத்து செய்யப்பட்டது திமுகவினருடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, இதற்கான காரணம் என்னவென்றால் தற்போது உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளதால் அதற்கான எதிர்ப்பு பல மடங்கு அதிகமாக வெளிப்படும் என்ற பயத்தில் இந்த கூட்டங்களை ரத்து செய்துள்ளனர் எனவும் சில தகவல்கள் தெரிகின்றன.

ஆனால் இது குறித்து திமுகவினர் சார்பில் மழை வரும் என்ற காரணமாகத்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க இருந்த கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் உரிய தேதியில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னணியை விசாரித்த போது உதயநிதி பேசியது அகில இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொதுவெளியில் கூட்டங்கள் போட்டால் மேலும் சர்ச்சையை தான் ஏற்படுத்தும் இதனால் உதயநிதி பேசுகின்ற நிகழ்ச்சிகள் ரத்து செய்ததாக தெரிகிறது.

ஏன் இப்படி சனாதானம் குறித்து பேச வேண்டும் பிறர் ஒரு கூட்டத்தை நடத்துவதாக அறிவித்துவிட்டு பின்ன அதை ஏன் ரத்து செய்ய வேண்டும் என்றும் ஒரு அரசியல்வாதி, அதுவும் பதவியில் இருக்கும் அரசியல்வாதி இவ்வாறு நடந்து கொள்வது வேண்டாத வேலை என்று அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் உதயநிதி தனக்குத்தானே வினையை தேடிக்கொண்டார் எனவும் பலர் பல்வேறு கருத்துக்களை கூறிவருகின்றனர்....

Next Story
கதிர் தொகுப்பு
Trending News