Kathir News
Begin typing your search above and press return to search.

முதல்வருக்கு பறந்த ரகசிய ரிப்போர்ட்...! பயத்தில் அறிவாலயம் செய்த காரியம்...!

முதல்வருக்கு பறந்த ரகசிய ரிப்போர்ட்...! பயத்தில் அறிவாலயம் செய்த காரியம்...!
X

Mohan RajBy : Mohan Raj

  |  12 Sep 2023 3:25 PM GMT

நெருங்கி வந்த ஆபத்து...! எச்சரிக்கை கொடுத்த முதல்வர்...!

2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் இந்திய நாட்டின் தேர்தல் அனைத்து கட்சியினருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இரண்டு முறை தனது ஆட்சியை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் பாஜக இந்த முறை வெற்றி பெற்று மூன்றாவது முறையும் தனது ஆட்சி நிலை நாட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, ஆனால் அவற்றை எதிர்க்க நாட்டில் இருக்கும் இடதுசாரி எதிர்கட்சிகளும் ஒன்று இணைந்து இந்தியா கூட்டணியில் இணைத்து தீவிரமாக திட்டங்களை தீட்டி வருகிறது.

இருப்பினும் பாஜக தனது பத்தாண்டு கால ஆட்சியில் செய்த நலத்திட்டங்கள் மற்றும் மக்களுக்கு செய்த நன்மைகள் ஆகிய அனைத்தையும் பாஜக கட்சி நிர்வாகிகள் மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்த்து வாக்குகளை சேகரிக்க களப்பணியாற்றிவருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் தற்போது அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் நடை பயணம் பெருமளவில் பாஜக தரப்பிற்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தற்போது தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக அரசிற்கு நீட் குறித்த சர்ச்சை, சனாதன ஒழிப்பு பற்றிய முதல்வர் மகனும் அமைச்சருமான உதயநிதியின் பேச்சு, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திமுக கொடுத்த வாக்குறுதிகளால் வெடிக்கும் போராட்டங்கள், இதற்கிடையில் கட்சிக்குள்ளையே பிளவுகள், சண்டைகள், அதுமட்டுமல்லாமல் மூத்த அமைச்சர்கள் மேலிருக்கும் சட்ட பிரச்சனைகள் என அனைத்தும் திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் கூட தமிழக முதல்வர்கள் வழங்கப்பட்ட உளவுத்துறை ரிப்போர்ட்டில் 2024 ஆம் ஆண்டு தேர்தல் களம் ஆளும் அரசுக்கு சாதகமாக இல்லை என்ற கருத்தும் அறிவாலய தலைமையை ஆடிப் போய் நிற்க வைத்துள்ளது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் அவர் கட்சியினரின் மகன், மகள் திருமணத்திற்கு சென்று அங்கும் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார், ஆனால் இந்த முறை அவர் சென்ற ஒரு திருமணத்தில் தனது கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது திமுக எம்எல்ஏ சபா ராஜேந்திரன் மகனின் திருமணம் நெய்வேலியில் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில் தமிழக முதல்வர் தான் கலந்து கொள்ள வேண்டியதாயிருந்தது ஆனால் ஜி 20 மாநாட்டில் குடியரசு தலைவர் அளித்த சிறப்பு விருந்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றார் முதல்வர், அதனால் அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றியதோடு முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாகவும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த காணொளி வாயிலாக கலந்து கொண்ட முதல்வர் மு க ஸ்டாலின் எம் எல் ஏ சபா ராஜேந்திரனை பெருமையாக பேசியதோடு, பொதுவாக திருமண விழாக்களில் கலந்து கொள்ளும் பொழுது இரண்டு நிபந்தனைகளை மணமக்கள் முன்னிலையில் வைப்பேன் முதல் நிபந்தனையாக அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்றும் இரண்டாவது நிபந்தனையாக நாட்டிற்கு தொண்டர்களாக இருங்கள் என்றும் முன்வைப்பேன் அந்த வகையில் நம்முடைய நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும், அப்பொழுதுதான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் எனவே இந்தியாவை காப்பாற்றுவதற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருக்கும் மொத்தம் 40 தொகுதிகளிலும் நாம் ஜெயித்து வெற்றி பெற வேண்டும் என்று கூறி 40 நமதே நாடும் நமதே என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே பெருமளவில் பின்னடைவில் இருக்கும் திமுகவிற்கு வரும் நாடாளுமன்ற தேர்தல் பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அதன் காரணமாகத்தான் முதல்வர் இப்படி பேசுகிறார் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News