திமுக அரசின் முடிவுக் காலம் வந்து விட்டது!! பிரதமர் மோடி பேச்சு!!

By : G Pradeep
செங்கல்பட்டு மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். திமுக அரசின் முடிவுக் காலம் தொடங்கிவிட்டது. தமிழ்நாடு மாற்றத்துக்கு தயாராகிவிட்டது என்றார்.
திமுக அரசை சிஎம்சி அரசு என அழைத்த அவர், ஊழல், மாபியா, க்ரைம் ஆகியவற்றை ஆதரிக்கும் அரசாங்கம் என விமர்சித்தார். திமுகவில் முன்னேற வேண்டும் என்றால், அந்த குடும்பத்துக்கு ஆமாம் சாமி போட்டாக வேண்டும் என்றும் கூறினார்.
தமிழக இளைஞர்களை போதைப் பொருள் கும்பலிடம் ஒப்படைத்துவிட்டது திமுக அரசு. போதைப் பொருள் அபாயத்தில் இருந்து நமது இளைஞர்களை நாம் மீட்டே ஆக வேண்டும் என்று மோடி வேண்டுகோள் விடுத்தார்.
என்டிஏ அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வரலாறு காணாத பணிகளை ஆற்றி இருப்பதாக கூறிய அவர், என்டிஏவுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், தமிழ்நாட்டை போதைப் பொருட்களில் இருந்து மீட்டெடுக்க உதவும் வாக்காக இருக்கும் என்றார்.
