Kathir News
Begin typing your search above and press return to search.

கோவை திமுகவில் பிரச்னை!! நிர்வாகிகள் மாற்றம், பதவி ராஜினாமா!!

கோவை திமுகவில் பிரச்னை!! நிர்வாகிகள் மாற்றம், பதவி ராஜினாமா!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  21 Feb 2026 6:08 AM IST

கோவை திமுகவில் உள்கட்சி பிரச்னை அதிகரித்துள்ளது. செந்தில் பாலாஜியை மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமித்ததும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.


தேர்தல் அறிவிப்புக்கு சில நாள்களே உள்ள நிலையில், திமுகவில் நிர்வாகிகள் மாற்றம் செய்து உள்ளனர். மதுக்கரை கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் விஜயசேகரன் மறைவால், திருமூர்த்தி ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


திருமலையம்பாளையம் பேரூர் செயலாளர் ராமராஜ் மாற்றப்பட்டதைக் கண்டித்து, 8 வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வட்ட செயலாளர்கள் பதவி ராஜினாமா செய்தார்கள். ராமராஜ் 30 ஆண்டுகளாக திமுகவில் களப்பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில் கட்சிக்குள் சாதிய அடிப்படையில் பதவி நியமனம் செய்யதை எதிர்க்கின்றோம் என திமுகவினர் கூறியுள்ளனர். இதனால் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News