ராஜ்ய சபா தேர்தல்!! பாஜக கூட்டணிக்கு சாதகம்!!

By : Bharathi Latha
பாஜக கூட்டணிக்கு ராஜ்ய சபா தேர்தல் சாதகமாக உள்ள நிலையில் 10 மாநிலங்களில் நடக்கும் இந்தத் தேர்தலில், 6 மாநிலங்கள் ஏற்கனவே பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களாக உள்ளது.
இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு கிட்டத்தட்ட 21 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மகாராஷ்டிராவில் 6 இடங்கள், தமிழ்நாட்டில் 2 இடங்கள், பீகாரில் 4 இடங்கள், மேற்கு வங்கத்தில் ஓரிடம், ஒடிசாவில் 3 இடங்கள், அஸ்ஸாமில் 3 இடங்கள், சத்தீஸ்கரில் ஓரிடம், ஹரியானாவில் ஓரிடம் பாஜக கூட்டணிக்குக் கிடைக்கும்.
இந்தியா கூட்டணிக்கு 14 இடங்கள் கிடைக்கலாம். தமிழ்நாட்டில் 4 இடங்கள், மேற்கு வங்கத்தில் 4 இடங்கள் திரிணாமுல் காங்கிரஸ், தெலங்கானாவில் ஓரிடம் காங்கிரஸ், சத்தீஸ்கர், அரியானா, இமாச்சல பிரதேசத்தில் தலா ஓரிடம் இந்தியா கூட்டணிக்கு கிடைக்கும்.
ஏற்கனவே ராஜ்ய சபாவில் பெரும்பான்மை எண்ணிக்கையைத் தாண்டியிருக்கும் பாஜக கூட்டணிக்கு, இது மிக மிக ப்ளஸ். இந்த ஆண்டு மொத்தம் 71 ராஜ்ய சபா இடங்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது. அதில் 40-க்கும் மேற்பட்ட இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுவிட வேண்டும் என்று இருப்பதாக கூறப்படுகிறது.
