Kathir News
Begin typing your search above and press return to search.

இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டம்!! காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா கண்டனம்!!

இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டம்!! காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா கண்டனம்!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Feb 2026 4:59 PM IST

இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் ஆடையை களைந்து போராட்டம் நடத்தியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா கண்டனம் தெரிவித்துள்ளார். சர்வதேச நிகழ்வுகளில் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.


இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களை அணிந்து அரங்கத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். கிருஷ்ணா ஹரி, குந்தன் யாதவ், அஜய் குமார், நரசிம்ம யாதவ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 5வது நபர் ஜிதேந்திர யாதவ் மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.


பிரதமர் மோடி இந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியினர் வெளிநாட்டு பிரதிநிதிகள் முன்பு ஆடையை களைந்து நின்றனர். இந்தியாவை அவமதித்துள்ளனர் என கூறியுள்ளார். இதனை கண்டித்து பாஜக இளைஞர் அணி சார்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News