Kathir News
Begin typing your search above and press return to search.

பஞ்சாபில் அச்சிடப்படும் தி.மு.க விளம்பரங்கள் - ஐ-பேக் கைவரிசையால் உடன்பிறப்புகள் அதிர்ச்சி!

பஞ்சாபில் அச்சிடப்படும் தி.மு.க விளம்பரங்கள் - ஐ-பேக் கைவரிசையால் உடன்பிறப்புகள் அதிர்ச்சி!
X

SG SuryahBy : SG Suryah

  |  1 March 2021 8:31 AM IST

தேர்தல் என்றாலே விளம்பரங்கள், பேனர்கள் தற்போது டிஜிட்டல் பேனர்கள் என கலைக்கட்டும் அரசியல் நிகழ்வுகள். தி.மு.க-வில் உடன்பிறப்புகளே பெரும்பாலும் இப்பணிகளை செய்து அதில் பணம் பார்ப்பார்கள் ஒவ்வொரு தேர்தலிலும். ஆனால், இத்தேர்தலிலோ பிரஷாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்தால் இதை நம்பி இருந்தவர்கள் தலையில் மண்ணள்ளிப்போட்டது போல் ஒரு விஷயம் நடந்துள்ளது.

அதாவது, இத்தேர்தலில் தி.மு.க-வுக்காக அச்சிடப்படும் பேனர்கள், போஸ்டர்கள் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் போன்றவை பஞ்சாபில் அச்சிடப்பட்டு இங்கு பட்டுவாடா செய்யப்படுவது உடன்பிறப்புகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே தி.மு.க தலைவர்கள் ஐ-பேக் வருகையால் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், நம்ம வயித்துலயும் அடிச்சிட்டானுவளே என உடன்பிறப்புகள் ஐ-பேக்கை வறுத்து எடுக்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News