உயிர்கள் வாழத்தகுந்த மற்றொரு கிரகம்: இன்னொரு பூமியா?

சமீபத்திய ஆய்வில் வானியலாளர்கள் பூமிக்கு ஒத்த வாழத்தகுந்த சூழலைக் கொண்ட ஒரு புதிய கிரகத்தைக் கண்டறிந்துள்ளனர். 'கிளைஸி 486B' என அழைக்கப்படும் ஒரு எக்ஸோபிளானட் சமீபத்தில் அதன் நட்சத்திரமான கிளைஸி 486 ஐச் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
சூரியனின் நிறையில் ஐந்தில் ஒரு பங்கும் மற்றும் பூமியின் அளவை விட மூன்று மடங்கு பெரியதும் ஆன இந்த கோள் (சூப்பர் எர்த்), உயிர்கள் வாழத்தகுந்த இன்னொரு கிரகமாக கருதப்படுகிறது. இது 26.8 ஒளி-ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இது அருகாமையில் இருப்பதால், பிரபஞ்சத்தில் உள்ள உயிர்களை ஆதரிக்கும் வகையில் அங்கு தேவையான நிலைமைகள் உள்ளதாக என்பதைப் புரிந்துகொள்ள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
கிளைஸி 486B பூமியைப் போன்ற ஒரு உலோக மையத்தைக் கொண்டுள்ளது, ஆனால் அதன் நிலப்பரப்பு சூடாகவும் வறண்டதாகவும் தோன்றுகிறது. இது அதன் ஒரு பகுதியாக இருக்கலாம், ஏனென்றால் வெப்பமான அந்த சூப்பர் எர்த் அதன் நட்சத்திரத்திற்கு மிக அருகில் சுழன்று வருகிறது.
அது சூரியனை ஒருமுறை சுற்றி வர பூமியின் கால அளவில் ஒரு வருடம் ஆகும் என்று கூறப்படுகிறது. அதன் மேற்பரப்பில் வெப்பநிலை சுமார் 430 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்த புதிய கோள் குறித்து இந்த தகவல்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. இது மனிதர்கள் வாழ ஏற்றதா? வேற்றுகிரக வாசிகள் எங்கு உள்ளனரா? என்பதெல்லாம் இனிமேல் செய்யப்படும் ஆராய்ச்சிகள் மூலமே தெரியவரும்.