Kathir News
Begin typing your search above and press return to search.

வாரிசுகளுக்கு வாய்ப்புக்களை அள்ளி வீசிய தி.மு.க - வேதனையில் தொண்டர்கள்!

வாரிசுகளுக்கு வாய்ப்புக்களை அள்ளி வீசிய தி.மு.க - வேதனையில் தொண்டர்கள்!
X

ShivaBy : Shiva

  |  13 March 2021 11:19 AM GMT

நவீனகால மன்னராட்சி என்பதற்கு சரியான உதாரணமாக இருந்து வரும் திமுக மீண்டும் ஒரு முறை அதனை நிரூபித்துள்ளது. இந்த முறை சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் ஏற்கனவே பதவியில் இருந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ. வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


கருணாநிதி மகன் ஸ்டாலினுக்கு கொளத்தூர் தொகுதி, ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு சேப்பாக்கம் தொகுதி, ஐ.பெரியசாமி மகன் செந்தில் குமாருக்கு பழனி தொகுதி, தூத்துக்குடி பெரியசாமியின் மகள் கீதா ஜீவனுக்கு தூத்துக்குடி தொகுதி ஆலடி அருணா மகள் பூங்கோதைக்கு ஆலங்குளம் தொகுதி, தங்கபாண்டியன் மகன் தங்கம் தென்னரசு கன்னியாகுமரி தொகுதி, டி.ஆர்.பாலு மகன் பி.டி.ஆர்.ராஜாவுக்கு மன்னார்குடி தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் மகன் தியாகராஜனுக்கு மதுரை மத்திய தொகுதி, பொய்யாமொழி மகன் மகேஷுக்கு திருவரம்பூர் தொகுதி, க.அன்பழகன் பேரனுக்கு வில்லிவாக்கம் தொகுதி என பல்வேறு சட்டமன்ற தொகுதிகள் ஏற்கனவே பதவி வகித்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் பல்வேறு தொகுதிகளில் ஏற்கனவே பதவி வகித்தவர்களில் தம்பி, அண்ணன் என குடும்ப வாரிசுகளுக்கு இந்த முறையும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் கோஷ்டி மோதல்கள் ஏற்பட்டு வருவது நாம் அறிந்த ஒன்றே.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வந்தபோது, தி.மு.க வாரிசு அரசியலில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார். அப்போது இதற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இதேபோல் தன் மகன் உட்பட தன் குடும்பத்தில் இருந்து யாருக்கும் இனி சீட் கிடையாது என்றும் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், தற்போது வெளியிட்டப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் பாதிப்பேர் வாரிசு அரசியல்வாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களை கட்சிக்காக அர்ப்பணித்துக் கொண்டு களத்தில் இறங்கி வேலை செய்பவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் வாரிசுகள் என்ற ஒரே தகுதி மட்டுமே உடையவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது சரியா என்று திமுக தொண்டர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News