கடவுளை இழிவுபடுத்தும் தி.மு.க.விற்கு எங்கள் வாக்கு இல்லை - இந்துக்கள் முடிவு!
By : Shiva
தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களிக்க மாட்டோம் என்று இந்து முன்னணி, பூசாரிகள் பேரவை உள்ளிட்ட இந்து அமைப்புகள் துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று வினியோகித்து வருவதால் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
தமிழகத்தில் இந்துக்களையும் இந்து கடவுள்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் மீது இந்து மக்கள் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்றால் அங்கு வழிபாடு நடத்துவது, மசூதிக்கு சென்று அங்கு நடக்கும் சடங்குகளில் பங்குகொண்ட பிறகு பிரியாணி சாப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகம் கோவிலுக்கு சென்றால் அங்கு வழங்கும் திருநீரை உடனடியாக நெற்றியிலிருந்து அழித்துவிடுவது, பக்தர்கள் சார்பாக வேல் வழங்கினால் அதனை வாங்க மறுப்பது போன்ற இந்து விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் இந்து மக்கள் தி.மு.க. மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
இதனால்பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையின்படி இந்து மக்களை கவர வேண்டும் என்று பல்வேறு வெற்று அறிவிப்புகளை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இந்துக்கள் யாரும் தி.மு.க.விற்கும் அவர்களின் கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களிக்கக் கூடாது என்று இந்து அமைப்பினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வினியோகித்து வருகின்றனர். அதில் 'நானும் என் குடும்பத்தினரும் இந்துக் கடவுள்கள், சடங்கு சம்பிரதாயங்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் தி.மு.க. மற்றும் அவர்களது கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களிக்க மாட்டோம் இது என் தாய் மற்றும் குலதெய்வத்தின் மீது ஆணை!' என்று அச்சிடப்பட்டுள்ளது.
இதனை இந்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரப்பி தங்கள் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இந்து வாக்காளர்களை கவரும் விதத்தில் தி.மு.க. தலைவர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தாலும் அதனைப் உண்மை என்று நம்பி இந்து மக்கள் தி.மு.க.விற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் நெட்டிசன்கள் இந்த அமைப்பினருக்கு தங்களின் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.