தேர்தல் சமயத்தில் மட்டுமே ஸ்டாலினுக்கு ஞாபகம் வரும் "திருவாரூர்" மற்றும் "இந்து'க்கள்"

முதல்வராக போட்டியிடும் முதல் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு
திருவாரூரில் இருந்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று தனது பிரச்சாரத்தை துவங்கினார். தேர்தல் என்றால் உடனை தி.மு.க'விற்கு ஞாபகம் வரும் இரண்டு விஷயங்கள் ஒன்று இந்து'க்கள் மற்றொன்று திருவாரூர்.
தேர்தல் இல்லா சமயங்களில் இந்து'க்கள் மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டுமே தி.மு.க'வின் தலைவர்களுக்கு தேவைப்படாது. இந்துக்களை வாய்க்கு வந்தபடி ஏசும் வீரமணி, திருமாவளவன், ஆ.ராசா போன்ற அரசியல் தலைவர்களை கண்டுகொள்ளாமல் தி.மு.க தலைமை அவர்களை மறைமுகமாக ஆதரிக்கும் இன்னும் சொல்லப்போனால் அப்படி இந்து மத கடவுள்களை கேவலமாக விமர்சிப்பவர்களை தி.மு.க தலைவர் ஸ்டாலின் உச்சிமுகராத குறையாக கொண்டாடுவார். ஆனால் தேர்தல் என வந்துவிட்டால் இந்துக்களின் ஒரு மடத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள் வரிசையாக கூச்சமின்றி காலில் விழுவார்கள் தி.மு.க'வினர்.
உதாரணமாக கறுப்பர் கூட்டம் கந்த சஷ்டி அவமதிப்பை வார்த்தைக்கு கூட கண்டிக்க தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு மனம் வரவில்லை ஆனால் தேர்தல் பரப்புரையில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என அப்பாவும், மகனும் மாறி மாறி போட்டி போட்டுக்கொண்டு வேல் தூக்கி வலம் வந்ததை கண்டு ஊரே சிரித்தது ஆனால் பதவிதான் முக்கியம் என மக்களின் ஏளனத்தை கூட கவலை படாமல் வலம் வந்தனர் தி.மு.க'வினர் ஏனெனில் பதவி ஆயிற்றே? பத்து வருட காத்திருப்பு ஆயிற்றே?
இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து கிடையாது, விபூதி போன்ற இந்து மத அடையாளங்களை சபை நாகரீகம் கருதி கூட மதிப்பது கிடையாது ஆனால் மற்ற சமயங்களில் ஆனால் தேர்தல் வந்துவிட்டார் பதவி மோகத்தில் சாஷ்டாங்கமாக காலில் விழ தயங்குவதில்லை ஸ்டாலின்.
இது போன்றே திருவாரூர் நகரமும் தி.மு.க'வினருக்கு! 2016'ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் "தி.மு.க ஆட்சிக்கு வந்தால் திருவாரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்" எனவும் தேர்தல் பரப்புரையின் போது கருணாநிதியின் வழக்கமான வசனமான "இதுவே எனது கடைசி தேர்தலாக இருக்கலாம்" என்ற தழுதழுத்த குரலுடன் கூடிய வசனமும் திருவாரூர் நகரில் கருணாநிதியால் கூறப்பட்டது. விளைவு திருவாரூர் எம்.எல்.ஏ'வானார் கருணாநிதி அவர் கூறியபடியே 2016 தேர்தலே அவருக்கு கடைசி தேர்தலானது ஆனால் திருவாரூர் நகரத்தை அப்படியே அம்போ என விட்டுவிட்டனர் தி.மு.க'வினர்.
கேட்டால் நாங்கள் எதிர்கட்சி என்ன செய்ய இயலும் என அப்பாவியாக கேட்பார்கள் தி.மு.க'வினர். எதிர்கட்சி கோடிகளில் செலவு செய்து ஒவ்வோரு முறை பாரத பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் "கோ பேக் மோடி" கோஷமிடலாம் ஆனால் தனது வாக்குறுதியை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியாத தி.மு.க'விற்கு?
குண்டும், குழியுமான சாலைகள், முறையாக தூர் வாரப்படாத நீர் வழித்தடங்கள், அ.தி.மு.க ஆட்சியில் திறந்து வைக்க கூடாது என்ற எண்ணத்திலேயே வியாபாரிகளை தூண்டி விட்டு கிடப்பில் போடப்பட்ட புதிய பேருந்து நிலையம் என உட்கட்டமைப்பில் மிகவும் பின்தங்கிய திருவாரூர் நகரம் தேர்தல் என்றால் மட்டுமே தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு கண்ணுக்கு தெரியுமானால் இதன் பெயர் நாடக அரசியல் அன்றி வேறென்ன ஸ்டாலின் அவர்களே?