தொழுநோயாளிகளுடன் அடைத்து சித்தரவதை செய்யப்பட்ட ஸ்டாலின்! ஒபாமாவிற்கு நிகரானவர் - வார்த்தை ஜாலங்களால் காமெடி ஷோ நடத்திய வைகோ!
By : Muruganandham
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
தொடர்ந்து பேசிய வைகோ, ஒபாமா மாதம் இருமுறை மக்களை சந்தித்து குறைகளை கேட்பார். அதன்பிறகு ஸ்டாலினை தான் அவ்வாறு பார்க்கிறேன். கொளத்தூர் தொகுதியில் ஒவ்வொரு வாக்காளர்களும் தான் வேட்பாளர் என்று பெருமைபடும் அளவிற்கு தொகுதியில் உழைத்துள்ளார்.
திருமண ஆன சில நாட்களில் சிறை சென்று தொழுநோயாளிகள் அடைக்கப்பட்ட சிறையில் அடைத்து சித்தரவதை செய்யப்பட்டு அத்தனை கொடுமைகளையும் கடந்து திமுகவின் தலைவராக உருவெடுத்திருகிறார் ஸ்டாலின் என்று கூறி பல கற்பனை குதிரைகளை மேடையில் மேயவிட்டார்.
எப்படி இருந்த அவர் நிலை, இந்த அளவுக்கு மோசமாக சென்றதை மதிமுக தொண்டர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எம்.ஜி.ஆர்., தமிழகத்தை ஆட்சி செய்த போது, தி.மு.க.,விற்கும், கருணாநிதிக்கும் பேருதவியாக பணியாற்றினார், வைகோ. வைகோவின் செல்வாக்கு, தொண்டர்களிடம் அதிகரித்து செல்வதைப் பார்த்த கருணாநிதிக்கு, அச்சம் ஏற்பட்டது.
தனக்கு அடுத்து, தன் மகன் ஸ்டாலின் தான், தி.மு.க.,வுக்கு தலைமை ஏற்க வேண்டும் என நினைத்த கருணாநிதி, அதற்கு போட்டியாக உருவாகி வந்த வைகோவை, கட்சியில் இருந்து நீக்கினார்.
யாருக்கு எதிராக கட்சி துவக்கினாரோ, அந்த தி.மு.க., உடன் கூட்டணி அமைத்து, இன்று பல அவலங்களை சந்தித்து வருகிறார்.