நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தியின் வெற்றி உறுதி -ஐபேக் சர்வேயினால் தி.மு.க. அதிர்ச்சி!
By : Shiva
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் எம்.ஆர்.காந்தியின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று ஐபேக் நிறுவனம் தி.மு.க தலைமையிடம் தெரிவித்துள்ளது. இதனால் அதிருப்தியில் இருக்கும் தி.மு.க. தலைமை நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிகளில் தங்கள் பிரச்சாரத்தை பலப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.ஆர்.காந்தி போட்டியிடுகிறார். பல ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வரும் இவர் அந்த பகுதியில் அனைவரும் எளிதாக அணுகும் நிலையில் இருப்பதால் மக்கள் மத்தியில் இவருக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. அதே சமயம் இவரை எதிர்த்துப் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சுரேஷ் ராஜனைப் பற்றிய அந்தப் பகுதியில் உள்ள மக்களின் மனநிலை இதற்கு நேர் எதிராக அமைந்துள்ளது.
மக்களிடம் எந்த நல்ல பெயரும் வாங்காத சுரேஷ் ராஜனுக்கு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் வாய்ப்பு அளித்தது தவறு என்று கட்சித் தலைமையின் மீது அந்த தொகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளே அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட எம்.ஆர்.காந்திக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என்று ஐபேக் நிறுவனம் நடத்திய ரகசிய சர்வேயில் தெரிய வந்துள்ளது.
எனவே இந்த விஷயம் தொடர்பாக கட்சியின் மேலிடத்தில் பேசி வருவதாகவும் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி வாய்ப்பை பெறுவதற்கு இன்னும் பல மடங்கு களப்பணி ஆற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தி.மு.க.வின் தோல்வி உறுதியாகியுள்ளது என்று ஐபேக் நிறுவனம் கட்சி மேலிடத்தில் தெரிவித்திருப்பது பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் எம்.ஆர்.காந்தியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் தாமரை மலர்ந்து விடும் என்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.