Kathir News
Begin typing your search above and press return to search.

வி.ஐ.பி கேண்டிடேட் தி.மு.க வேட்பாளர்களுக்கு விரைவில் பெட்டி கைமாறப்போகிறது - தலைமை எடுத்த அவசர முடிவு!

வி.ஐ.பி கேண்டிடேட் தி.மு.க வேட்பாளர்களுக்கு விரைவில் பெட்டி கைமாறப்போகிறது - தலைமை எடுத்த அவசர முடிவு!
X

MuruganandhamBy : Muruganandham

  |  23 March 2021 1:00 AM GMT

அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களை எதிர்த்துப் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களுக்கு, கட்சி தலைமையில் இருந்து, மற்ற தொகுதிகளைக் காட்டிலும் கூடுதலாக 50 சதவீதம் தேர்தல் நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரச்சாரத்தின் போது வேட்பாளர்களுடன் கூடவே வரும் நிர்வாகிகள், கட்சி தொண்டர்களுக்கு சாப்பாடு, மற்ற இதர செலவுகள், பிரச்சாரம் செய்யும் ஒவ்வொரு முனையிலும் ஒலிப்பெருக்கி அமைக்கும் செலவு, பட்டாசு வெடிக்க ஆகும் செலவும், வேட்பாளர்கள் வருவதற்கு முன் திரட்டப்படும் கட்சியினருக்கு சாப்பாடு செலவு உள்ளிட்ட பல்வேறு செலவுகள் உள்ளன.

இதில், சிலவற்றை மட்டும் வேட்பாளர்களையேப் பார்க்கச் சொல்லி அறிவுறுத்திய தி.மு.க தலைமை, கடைசிக் கட்டப் பிரச்சாரத்தின்போது, இன்னும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த கூடுதல் தொகையை வேட்பாளர்களுக்கு வழங்க உள்ளது.

அதற்காக அ.தி.மு.க அமைச்சர்கள், அக்கட்சியின் மற்ற வேட்பாளர்கள், அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்கள் என தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மூன்று தரமாக பிரித்து, அவர்களின் வேலை பளுவுக்கு ஏற்ப கட்சித் தலைமை செலவுக்கு பணம் வழங்க உள்ளது.

இதில், தி.மு.க. வின் மற்ற வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளைக் காட்டிலும் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு 50 சதவீதம் கூடுதல் தேர்தல் நிதி வழங்க திட்டமிட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.கவும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்ததுபோக நேரடியாக 131 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.

ஆனால், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் அமைச்சர்களை எதிர்த்து தி.மு.க போட்டியிட இருந்த சில தொகுதிகளை கூட்டணிக் கட்சிகள் பெற்றுவிட்டன. மீதமுள்ள தொகுதிகளில் அமைச்சர்களை எதிர்த்து திமுக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News