Kathir News
Begin typing your search above and press return to search.

"கோவில் நிலத்தை பட்டா போடுவோம்"- வெளிச்சத்துக்கு வந்த தி.மு.க.வின் உண்மை முகம்!

கோவில் நிலத்தை பட்டா போடுவோம்- வெளிச்சத்துக்கு வந்த தி.மு.க.வின் உண்மை முகம்!
X

ShivaBy : Shiva

  |  25 March 2021 7:43 AM IST

கரூரில் பிரச்சாரத்திற்கு சென்ற செந்தில் பாலாஜி கோவில் நிலத்தில் வீடு கட்டி இருப்பவர்களுக்கு நிரந்தரமாக பட்டா பெற்று தரப்படும் என்றும் பட்டா தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கரூரில் தி.மு.க. சார்பாக செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். தோல்வி பயம் காரணமாக பல்வேறு வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு வரும் இவர் தற்போது கோவில் நிலங்களில் வீடு கட்டி இருப்பவர்களுக்கு பட்டா பெற்று தரப்படும் என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கோவில் நிலத்தை பட்டா போட்டு சிலர் பெற்று விட்டதால் அங்கு வீடு கட்டி குடி இருப்போருக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவில் நிலத்தில் வீடுகட்டி இருப்பவர்களுக்கு பட்டா தொடர்பாக எந்த பிரச்சினையும் வராது என்று செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.

கடந்த தி.மு.க. ஆட்சியின்போது கோவில் நிலங்கள் எங்கெல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டதோ அங்கெல்லாம் கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு மீட்டு வருகிறது. கடந்த பத்து வருடங்களில் மட்டும் பல கோடி மதிப்புள்ள ஏக்கர் கணக்கிலான கோவில் நிலங்களை அரசு மீட்டு உள்ள நிலையில் தற்போது கோவில் நிலங்கள் பட்டா போட்டு கொடுக்கப்படும் என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிபெற்று விடுவோம் என்ற அதீத நம்பிக்கையில் 11 மணிக்கு ஸ்டாலின் பதவி ஏற்ற உடன் 11:05க்கு ஆற்றில் மணல் அள்ளிக் கொள்ளலாம் என்று பேசிய செந்தில் பாலாஜி தற்போது கோவில் நிலத்தையே பட்டா போடுவோம் என்று தெரிவித்துள்ளது திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன மாதிரியான சமூக விரோத இந்து விரோத செயல்களில் ஈடுபடும் என்பதற்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

ஏற்கனவே மாட்டு வண்டியை எடுத்துக்கொண்டு ஆற்றில் இருக்கும் மணலை அள்ள சென்றுவிடலாம் என்று வாக்குறுதி அளித்து அனைவரிடமும் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்ட செந்தில் பாலாஜி தற்போது கோவில் நிலத்தை பட்டா போடுவேன் என்று கூறி உள்ளது திமுக தேர்தல் அறிக்கையில் கோவிலுக்கு நிதி இந்துக்களுக்கு புனித பயணம் செல்ல உதவித் தொகை என்று அறிவித்ததை எல்லாம் தண்ணீரில் தான் எழுத வேண்டும் என்று மக்களின் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News