Kathir News
Begin typing your search above and press return to search.

"எனக்கு ஒரு ஓட்டு; மாஜி எம்.பி.க்கு ஒரு ஓட்டு"- தி.மு.க.வினரை அதிர வைத்த எம்.எல்.ஏ.வின் பிரச்சாரம்.!

எனக்கு ஒரு ஓட்டு; மாஜி எம்.பி.க்கு ஒரு ஓட்டு- தி.மு.க.வினரை அதிர வைத்த எம்.எல்.ஏ.வின் பிரச்சாரம்.!
X

ShivaBy : Shiva

  |  26 March 2021 6:15 AM IST

தி.மு.க. என்றாலே திருட்டுத் தனம் தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. சமூக நீதி, சமத்துவம் என்று பேசும் தி.மு.க அவற்றை சற்றும் கடைபிடிப்பதில்லை என்பதும் நாம் அறிந்ததே. இதை நிரூபிக்கும் விதமாக தி.மு.க. வேட்பாளர் புது டெக்னிக் ஒன்றை பயன்படுத்தி ஓட்டுக் கேட்டு வருகிறார்.

சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த புது டெக்னிக் "எனக்கு ஒரு ஓட்டு; மாஜி எம்பிக்கு ஒரு ஓட்டு" என்பது தான். அது என்ன டெக்னிக் என்கிறீர்களா? கன்னியாகுமரியில் நாகர்கோவில் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக ஏற்கனவே எம்.எல்.ஏவாக இருக்கும் சுரேஷ் ராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மீது நில அபகரிப்பு, மோசடி, அரசு அதிகாரிகளை பொது வெளியில் தாக்கியது என்று பல்வேறு வழக்குகள் இருப்பதால் தி.மு.க.வினரே இவர் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் ஓட்டுக்களைக் கவர சுரேஷ்ராஜன் இந்த "எனக்கு ஒரு ஓட்டு; மாஜி எம்பிக்கு ஒரு ஓட்டு" ஃபார்முலாவைக் கையில் எடுத்திருப்பதாகவும் இதனால் சக திமுகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் ‌அதிர்ச்சியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு மத்திய அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீட்டை பிரச்சினை இல்லாமல் செயல்படுத்த வேண்டும் என்றால் எனக்கு ஓட்டு போடுங்கள் என்று இவர் வாக்கு சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் கோவில்களுக்கு தான் நிறைய செய்திருப்பதாக காட்டிக் கொள்ளும் முயற்சியில் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கோவில்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தன்னுடைய சொந்த நிதியில் நாகராஜகோவிலில் மேற்கூரை அமைத்துக் கொடுத்ததாகவும் சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றார்.

ஆனால் தொகுதி மக்களோ நாகாராஜா கோவில் மற்றும் பிற கோவில்களுக்கு வரும் வருமானத்தை அறநிலையத் துறை முறையாக பயன்படுத்தி, அதன் சொத்துக்களைப் பாதுகாத்திருந்தால் தன்னுடைய பணத்தை செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது என்றும், அறநிலையத் துறை கொள்ளையடிக்கும் பணம் யார் பாக்கெட்டுக்கு போகிறது என்று தெரியாதா என்று விமர்சிக்கின்றனர்.










சமத்துவம், மதச்சார்பின்மை என்பவையெல்லாம் மற்ற கட்சிகளுக்குத் தான், ஆட்சியைப் பிடிப்பது தான் முதல் வேலை என்பது போல் திமுக தலைமை ஒரு பக்கம் செயல்பட, அதனைப் பின்பற்றி தொகுதியில் ஜெயிப்பது தான் முக்கியம் என்று எம்எல்ஏ சுரேஷ்ராஜன் இப்படிப்பட்ட பிரச்சாரத்தில் இறங்கி இருப்பது சக கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

இப்படிப்பட்ட பிரச்சாரத்தில் அவர் இறங்கி இருப்பது யாரும் அணுகக் கூடிய எளிய மனிதரான பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாவதையே காட்டுவதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News