Kathir News
Begin typing your search above and press return to search.

பரோட்டா சாப்பிட்டு விட்டு பணம் தராமல் தி.மு.கவினர் ரகளை - கருத்துகணிப்பு முடிவுகளுக்கே இப்படியா என மக்கள் ஆதங்கம்!

பரோட்டா சாப்பிட்டு விட்டு பணம் தராமல் தி.மு.கவினர் ரகளை - கருத்துகணிப்பு முடிவுகளுக்கே இப்படியா என மக்கள் ஆதங்கம்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  26 March 2021 9:45 AM IST

சேத்துப்பட்டு அருகே சாப்பிட்ட பரோட்டாவுக்கு உரிய பணத்தைத்தராமல் ரகளையில் ஈடுபட்ட தி.மு.க'வினர், ஓட்டல் உரிமையாளரைத் தாக்கி கடையையும் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரத்தில் பிரபலமான மதுரை முனியாண்டி ஓட்டல் அமைந்துள்ளது. இங்கு நேற்று இரவு 7.30 மணி அளவில் தி.மு.க இளைஞர் அணியைச் சேர்ந்த பாபு என்பவர் சாப்பிட வந்துள்ளார். அங்கு அவர் பரோட்டா சாப்பிட்டார். பின்னர் ஒரு செட் பரோட்டா ரூ.30 என்று கடை ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து சாப்பிட்டதற்கு உரிய பணத்தை கொடுக்காமல் கடை ஊழியர்களுடம் பாபு ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

அங்கிருந்த பரோட்டா மாஸ்டர், பெண் ஊழியர் ஆகியோரை அவர் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார் இதனால் பரோட்டா மாஸ்டருக்கும், பாபுவுக்கும் தகராறு ஏற்பட்டது இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிகொண்டனர். இதனையடுத்து கடையில் இருந்து வெளியேறிய பாபு, தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை கடைக்கு அழைத்து வந்தார்

அங்கு வந்து ஓட்டலை பாபு மற்றும் அவரது கோஷ்டியினர் சரமாரியாக அடித்து நொறுக்கி சூறையாடினர் இதுமட்டுமல்லாது இன்று காலையில் பாபுவின் நண்பரான குணா என்பவரும் தனது நண்பர்களோடு ஒட்டலுக்கு வந்து கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கி கடையில் வைக்கப்பட்டிருந்த பேனரையும் கிழித்து எறிந்தார்.

இதுகுறித்து ஊராட்சி தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் தி.மு.க'வைச் சேர்ந்தவர் என் பதால் இது குறித்த புகார் காவல் நிலையத்திற்கு செல்லக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். எனவே பஞ்சாயத்து மூலம் இந்த விவகாரம் பேச்சுவார்த்தைக்கு வந்தது.

ஏற்கனவே இதேபோன்று உணவகங்களில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல், கடை உரிமையாளரை தாக்கியுள்ளனர் என்ற புகார் தி.மு.கவினர் மீது உள்ளது இது குறித்த மீம்ஸ்கள் ஏற்க னவே சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் அதேபோன்ற சம்பவம் சேத்துப்பட்டில் அரங்கேறியது பரபரப்பை ஏற்பட்டுள்ளது. சில கருத்துக்கணிப்புகளில் தி.மு.க வெற்றி பெறும் என கூறியதற்கே இந்த நிலை எனில் வெற்றி பெற்றால் என்னவாகும் என மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News