கள்ள உறவில் பிறந்தவர் எடப்பாடி பழனிச்சாமி என கூறிய ஆ.ராசா - அருவருப்பின் உச்சத்தில் தி.மு.க பிரச்சாரம்!

அரசியல்வாதிகளின் பேச்சுக்கள்தான் அவர்களின் தராதரத்தை எடுத்துக்காட்டும். அவர்களின் தரமான அரசியல் அவர்களின் பேச்சில் வெளிப்படும். ஆனால் மனதில் காழ்ப்புணர்ச்சி பொங்க இருப்பவர்கள் பேச்சு முகம் சுழிக்கும் அளவிற்கே இருக்கும்.
அந்த வகையில் தி.மு.க எம்.பி ஆ.ராசா'வின் பிரச்சார பேச்சு முகம் சுளிக்க வைப்பது மட்டுமல்லாமல் ஆ.ராசா'வின் மனதில் உள்ள காழ்ப்புணர்ச்சி, எண்ண ஓட்டம் ஆகியவை வெளிப்படையாக தெரிகிறது சமீப காலங்களில்.
இரு தினங்களுக்கு முன் பிரச்சாரத்தில் பேசிய தி.மு.க எம்.பி ஆ.ராசா "ஓராண்டு காலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பத்திரிக்கையில் குடுத்த விளம்பரத்தால் பத்திரிக்கைகள் அவரை புகழ்ந்து பேசுகின்றனர்" என்றார்.
மேலும் அவர் பேசியதுதான் அருவருப்பின் உச்சம், "நல்ல உறவில் சுகப்பிரசவமாக பிறந்தவர் ஸ்டாலின், கள்ள உறவில் குறைப்பிரசவமாக பிறந்தவர் எடப்பாடி பழனிச்சாமி" என பேசியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்வதையும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீப கால முதல்வர் பதவிக்கு பொருத்தமானவர் என மக்கள் ஆதரவளித்து வரும் நிலையில் எங்கே அது தங்களின் தி.மு.க ஆட்சி கனவிற்கு பாதகமாப அமையுமோ என்ற அச்சத்தில் ஆ.ராசா பேசி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கினறனர்.