ஸ்ரீரெங்கநாதர் கோபுரம் முன் பெரிய கும்பிடு போட்ட ஸ்டாலின் - தேர்தல் நேரத்தில் இந்துக்களின் வாக்குகளை கவர குட்டிக்கரணம் போடும் தி.மு.க!

By : Mohan Raj
முன்பெல்லாம் தி.மு.க பிரச்சாரத்தில் அந்த கட்சியை சார்ந்த தலைவர்கள் எந்த ஊருக்கெல்லாம் செல்கிறார்களோ அந்த ஊரில் இருக்கும் பெரியார் சிலைக்கு மரியாதை நிமித்தமாக கூட மாலை அணிவித்து மரியாதை செய்வர் கூடவே அந்த ஊரில் கோவில் பக்கத்தில் கூட்டம் இருந்தாலும் கூட கோவிலுக்கு செல்ல மாட்டார்கள். மாறாக கடவுள் நிந்தனையை அனைத்து கூட்டங்களிலும் செய்ய தவறமாட்டார்கள்.
ஆனால் இன்று காலம் மாறிவிட்டது இந்துக்கள் வாக்கு வங்கி உருவாகிய நிலையில் தி.மு.க'வின் தோல்விக்கு இந்துக்கள் வாக்கு வங்கியே பிரதான காரணமாக இருக்கும் என்பதை இந்துக்களை விட தி.மு.க தலைவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். ஆகையினால் தான் இப்பொழுதெல்லாம் எந்த ஊரில் பிரச்சார கூட்டம் நடந்தாலும் அந்த கோவிலுக்கு போவதை தி.மு.க வேட்பாளர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் மறந்தும் கூட அந்த ஊரில் உள்ள பெரியார் சிலையை சீண்டுவது கூட இல்லை.
அந்த வகையில் இந்துக்களின் புண்ணிய ஸ்தலமான ஸ்ரீரங்கத்தில் இன்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்பொழுது ஸ்ரீரங்க ஆலய கோபுரத்தின் முன் கூடியிருந்த கூட்டத்தின் முன் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
இதனை சமூக வலைதளங்களில் தி.மு.க'வினர் பதிவேற்றி வருகின்றனர். அதாவது முன்பெல்லாம் கடவுள் நிந்தனையை மட்டும் அதாவது இந்து கடவுளின் நிந்தனையை மட்டும் பேசி வந்த தி.மு.க'வினர் தற்பொழுது இந்துக்களின் நண்பன் என பிரச்சாரம் செய்து இந்துக்கள் வாக்கு வங்கியை கவர முயற்சிப்பது செயற்கையாக இருப்பதாக வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர்.
