ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாடம் - தமிழகம் முழுவதும் தி.மு.கவிற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு!
By : Mohan Raj
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இழிவுபடுத்தும் வகையில் பேசிய தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவை கண்டித்து அண்ணா தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அயனாவரம் சிக்னல் அருகே ஆ. ராசாவின் உருவ பொம்மையை எரித்து அ.தி.மு.க'வினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். மேலும் ஆ. ராசாவுக்கு எதிரான போராட்டம் தமிழகம் எதிர்ப்பு வலுவாக பரவி வருகிறது.
தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க வேட்பாளர் எழிலனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கட்சியில் அடிமட்ட தொண்டராக இருந்து உழைத்து முதல்வர் வேட்பாளராக உயர்ந்தவர் மு.க ஸ்டாலின், அவர் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு முறையாக பிறந்த குழந்தை எனவும், முதல்வர்
எடப்பாடி பழனிச்சாமி அப்படியல்ல, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர். அதாவது கள்ள உறவில் பிறந்த குழந்தை என ஆபாசமாக பேசினார்.
இந்த மூன்றாம் தர பேச்சு காரணமாக தி.மு.க மீது அ.தி.மு.க'வினர் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் கோபம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து அண்ணா தொழிற்சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் அயனாவரம் சிக்னல் அருகே ஆ.ராசாவின் உருவபொம்மை எரித்து, கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், "ஆ.ராசாவின் பேச்சு கண்டனத்திற்குரியது என்றும், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்" எனவும் எச்சரித்துள்ளனர்.