ஹாத்ராஸ் சம்பவத்திற்கு பெரும் போராட்டம் நடத்திய கனிமொழி ஏன் ஆ.ராசா மூன்றாம் தரமாக பேசியதற்கு கண்டிக்கவில்லை - மக்கள் கேள்வி!

ஹாத்ராஸ் சம்பவத்தை கண்டித்து தி.மு.க மகளிரணி சார்பில் பெரும் ஆர்ப்பாட்டதை நடத்தி மொழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்திய கனிமொழி தி.மு.க துணை பொதுச்செயலளர் ஆ.ராசா தமிழக முதல்வரின் தாயாரை ஆபாசமாக பேசியதற்கு ஏன் வாய் திறக்கவில்லை என தமிழக மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க வேட்பாளர் எழிலனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கட்சியில் அடிமட்ட தொண்டராக இருந்து உழைத்து முதல்வர் வேட்பாளராக உயர்ந்தவர் மு.க ஸ்டாலின், அவர் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு முறையாக பிறந்த குழந்தை எனவும், முதல்வர்
எடப்பாடி பழனிச்சாமி அப்படியல்ல, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர். அதாவது கள்ள உறவில் பிறந்த குழந்தை என ஆபாசமாக பேசினார்.
இதனை எதிர்த்து கட்சி பாகுபாடின்றி அனைவரும் கருத்து கூறி வருகின்றனர். அ.தி.மு.க'வினர் தேர்தல் ஆணையம் வரை ஆ.ராசா பிரச்சாரம் செய்ய கூடாது என புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் கடந்த இரு தினங்களாக நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கனிமொழி இதுபற்றி ஏதும் வாய் திறக்காமல் உள்றது ஆச்சர்யமாக உள்ளது.
மேலும் ஹாத்ராஸ் சம்பவத்திற்கு பெரும் போராட்டத்தை தி.மு.க சார்பில் மகளிரை கூட்டி நடத்தி காட்டிய கனிமொழி தற்பொழுது ஆ.ராசா'வின் பேச்சிற்கு வாய்மூடி மௌனம் காப்பது ஆ.ராசா'வின் பேச்சை ஆதரிப்பது போன்றதாகும் என்று மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.