Kathir News
Begin typing your search above and press return to search.

"ஆம் நான் உன் தலைவன் செருப்பை விட விலை கம்மிதான், ஏழை விவசாயி அப்படித்தானே இருக்க முடியும்?" - ஆ.ராசாவின் திமிர் பேச்சிற்கு எடப்பாடியின் தன்மையான பதில்!

ஆம் நான் உன் தலைவன் செருப்பை விட விலை கம்மிதான், ஏழை விவசாயி அப்படித்தானே இருக்க முடியும்? - ஆ.ராசாவின் திமிர் பேச்சிற்கு எடப்பாடியின் தன்மையான பதில்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  28 March 2021 10:45 AM IST

ஒருவரை இழிவுபடுத்தி பேசுவதை நல்ல பிரச்சாரம், கெத்தான பிரச்சாரம் என தி.மு.க நினைத்து கொண்டிருக்கையில் அதனையும் தனக்கு சாதகமாக மாற்றி வருவதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செய்து வருகிறார்.

எப்பொழுதுமே புத்திசாலிதனமாக பேசுவதாக மனதார நினைத்து கொண்டு வலம் வரும் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா

கடந்த வாரம் தமிழக முதல்வர் எடப்பாடி க பழனிச்சாமியை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் "என் தலைவன் ஸ்டாலின் போட்டிருக்கும் செருப்பிற்கு உன்னைவிட ஒரு ரூபாய் விலை அதிகம்" என வழக்கம்போல் திமிறாக பேசினார்.

இதனை அனைவரும் விமர்சித்து வந்த நிலையில், இதற்கு தனது பிரச்சாத்தில் தக்க பதிலடி தந்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி க பழனிசாமி. தனது பிரச்சார உரையில் இதனை பற்றி பதிலடி தந்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி, "ஒரு முதல்வரை செருப்புடன் ஒப்பிட்டு எவ்வளவு கேவலமாக பேசுகிறார்கள் என்று பார்த்தீர்களா? ஆமாம் நான் உங்கள் தலைவர் செருப்பை விட விலை கம்மிதான், ஏழை நான் அப்படித்தான் இருப்பேன், ஏழை விவசாயி எப்படி ஐயா விலை அதிகம் இருக்க முடியும்?" என தெளிவாக பேசியது அங்கிருந்த மக்களை மனம் இளக செய்தது.

தி.மு.க'வினர் திமிராக எதை பேசினாலும் அதனை சாமர்த்தியமாக எதிர்கொள்ளும் இவர் சரியான ஆள்தான் என்பதை பல இடங்களில் தி.மு.க'வினரே சொல்வதை கேட்க முடிந்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News