Kathir News
Begin typing your search above and press return to search.

"அம்மாயி இப்ப இருந்திருந்தா, ஆ.ராசா பேசினதுக்கு கோவப்பட்டு இருக்காது" - கலங்கும் எடப்பாடி ஊர்மக்கள்!

அம்மாயி இப்ப இருந்திருந்தா, ஆ.ராசா பேசினதுக்கு கோவப்பட்டு இருக்காது - கலங்கும் எடப்பாடி ஊர்மக்கள்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  28 March 2021 9:45 AM GMT

"அம்மாயி இப்ப இருந்திருந்தா, இதுக்குகூட கோவப்பட்டு இருக்காது. நம்மள இப்டி கேவலமா பேசுரதுல, அந்த புள்ளைக்கு சந்தோசம்னா, அப்படியே இருந்துட்டு போகட்டும். அவரு சந்தோசத்த கெடுக்க கூடாது" அப்டீனுதான் சொல்லும் என்கின்றனர் தமிழக முதல்வர் எடப்பாடி க பழனிசாமி அவர்களின் ஊர்ப்பெரியவர்கள்.

தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க வேட்பாளர் எழிலனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கட்சியில் அடிமட்ட தொண்டராக இருந்து உழைத்து முதல்வர் வேட்பாளராக உயர்ந்தவர் மு.க ஸ்டாலின், அவர் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு முறையாக பிறந்த குழந்தை எனவும், முதல்வர்

எடப்பாடி பழனிச்சாமி அப்படியல்ல, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர். அதாவது கள்ள உறவில் பிறந்த குழந்தை என ஆபாசமாக பேசினார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தின் பல பகுதிகளில் அரசியல் பாகுபாடின்றி அனைவரும் தி.மு.க'வின் இந்த மூன்றாம் தர பேச்சை கண்டித்து வருகின்றனர்.

இது தொடர்பாக எடப்பாடியை சேர்ந்த அந்த ஊர்ப்பெரியவர்கள் கூறும்போது, "கணவர் இறந்து பிறகு, வயலையும், வேளாண்மையையும் நேசித்தவர் தமிழக முதல்வர் எடப்பாடியின் தாயார் தவுசாயம்மாள். கணவன் இறந்த பின், இரு மகன்களையும் அடிக்கடி வயலுக்கு வரவழைத்து, விவசாயத்தை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என, அனுபவ யோசனைகள் சொல்லி வந்தார். சின்ன மகன் அரசியலுக்கு போனாலும், விவசாயத்தை மறந்து விடாதே என, வேர்களை நினைவூட்டிக் கொண்டே இருந்தார்.

கடந்த, 2006 சட்டசபை தேர்தலில், இடைப்பாடி தொகுதியில், இ.பி.எஸ்., தோல்வி அடைந்தார். அப்போது, அரசியல் எதிரிகள் கும்பலாக வந்து, இ.பி.எஸ்., வீட்டு முன் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதை விசாரிக்க வெளியே புறப்பட்டவர்களை, தவுசாயம்மாள் தடுத்து விட்டார் நம்ம வீட்டு முன்ன பட்டாசு வெடிக்கதுல, அவங்களுக்கு சந்தோசம்னா வெடிச்சுட்டு போட்டும், விடுங்க. மத்தவங்க சந்தோசத்த ஒருநாளும் கெடுக்கக் கூடாது' என, தவுசாயம்மாள் கூறியதாக, ஊர் பெரியவர்கள் நினைவு கூர்கின்றனர். அவர்கள் மேலும் கூறுகையில், 'தவுசாயம்மாள், தான் உண்டு, தன் வேலை உண்டு என இருப்பவர். விவசாய கூலியாட்கள் வேலை செய்யாமல் ஏமாற்றினால் கூட, கண்டிக்காமல் கடுஞ்சொல் பேசாமல், பக்குவமாக எடுத்து சொல்லுவார். அந்தளவுக்கு மென்மையானவர். அத்தனை நல்லவரான ஒரு தாயை முன்றாம் தரமாக பேச தி.மு.க ஆ.ராசா'விற்கு எப்படி மனசு வந்ததோ என ஊர் மக்கள் தவிக்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News