Kathir News
Begin typing your search above and press return to search.

"ஒரு முதலமைச்சருக்கே இப்படிப்பட்ட நிலை என்றால் தி.மு.க ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் பெண்களின் நிலை என்னாவது?" - ஆ.ராசா பேச்சிற்கு கண்ணீர் விட்ட முதல்வர் எடப்பாடி!

ஒரு முதலமைச்சருக்கே இப்படிப்பட்ட நிலை என்றால் தி.மு.க ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் பெண்களின் நிலை என்னாவது? - ஆ.ராசா பேச்சிற்கு கண்ணீர் விட்ட முதல்வர் எடப்பாடி!
X

Mohan RajBy : Mohan Raj

  |  28 March 2021 6:00 PM IST

"ஒரு முதலமைச்சருக்கே இப்படிப்பட்ட நிலை என்றால் தி.மு.க ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் பெண்களின் நிலை என்னாவது?" என ஆ.ராசா தரம் தாழ்ந்து பேசியதற்கு முதல்வர் எடப்பாடி இன்றைய தேர்தல் பிரச்சாரத்தில் ஆதங்கப்பட்டார்.

தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க வேட்பாளர் எழிலனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கட்சியில் அடிமட்ட தொண்டராக இருந்து உழைத்து முதல்வர் வேட்பாளராக உயர்ந்தவர் மு.க ஸ்டாலின், அவர் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு முறையாக பிறந்த குழந்தை எனவும், முதல்வர்

எடப்பாடி பழனிச்சாமி அப்படியல்ல, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர். அதாவது கள்ள உறவில் பிறந்த குழந்தை என ஆபாசமாக பேசினார். இந்த சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தின் பல பகுதிகளில் அரசியல் பாகுபாடின்றி அனைவரும் தி.மு.க'வின் இந்த மூன்றாம் தர பேச்சை கண்டித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இன்றைக்கு சென்னை திருவெற்றியூரில் தேர்ல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் எடப்பாடி க பழனிசாமி அவர்கள் கூறியதாவது, "நான் ஒரு முதலமைச்சராக இருக்கின்றேன். இதை பேசக்கூடாது என்றுதான் வந்தேன் இங்கு தய்மார்களை பார்த்ததால் பேசுகிறேன்" என கூறி சிறிது கண் கலங்கினார்.

பின் தொடர்ந்த அவர், "என் அம்மா'வா பார்க்க வேண்டாம், உன் குடும்பத்தில் ஒருவராக பார்த்திருக்கலாம் அல்லவா? எவ்வளவு கீழ்த்தரமாக பேசியிருக்கிறார்? ஒரு சாதாரண மனிதன் நான் முதல்வர் ஆனதற்கே என்னவெல்லாம் பேசுகிறார்கள்? இன்றைக்கு ஒரு முதலமைச்சருக்கே இந்ந நிலை எனில் தி.மு.க ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் பெண்களின் நிலை என்ன என்னாவது? யார் பாதுகாப்பு அளிப்பது? எனக்காக நான் பேசவில்லை, உங்களுக்காக நான் பேசுகிறேன்" என உணர்ச்சிகரமாக பேசினார்.

சுற்றி குழுமியிருந்த கூட்டம் அனைத்தும் அத்தனை ஆர்ப்பரிப்பு.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News