Kathir News
Begin typing your search above and press return to search.

மன்னார்குடியின் "ராசுக்குட்டி" ராஜாவாக வலம் வரும் டி.ஆர்.பாலு மைந்தன் - இந்த முறை தேர்தல் வரட்டும் என காத்திருக்கும் வாக்காளர்கள்!

மன்னார்குடியின் ராசுக்குட்டி ராஜாவாக வலம் வரும் டி.ஆர்.பாலு மைந்தன் - இந்த முறை தேர்தல் வரட்டும் என காத்திருக்கும் வாக்காளர்கள்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  29 March 2021 9:01 PM IST

ஒரு தொகுதியில் மக்கள் எந்தளவிற்கு பலன்கள் அனுபவிக்கிறார்களோ அந்தளவிற்கு'தான் மக்கள் திரும்பவும் ஒரே அரசியல்வாதியை மீண்டும் மீண்டும் பணியில் அமர்த்துவார்கள். மண்ணின் மைந்தன் என்ற ஒரு காரணத்தினால் ஒரு முறை, மீண்டும் அரசியலில் சிறுவன் என ஒருமுறை தேர்ந்தெடுத்துவிட்டு மன்னார்குடி மக்கள் படும் அவஸ்த்தை இருக்கிறதே அதை கூற சில வரிகள் பத்தாது.

"ராசுக்குட்டி" என்ற படத்தில் நடிகர் பாக்கியராஜ் ஒரு வேடத்தில் கதையின் நாயகனாக நடித்திருப்பார், அதில் கிராமத்து மைனராக விதவிதமாக உடையணிந்து கொண்டு பவுசாக ஊரை வலம் வருவார். தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு மகனும் தி.மு.க'வின் தற்போதைய மன்னார்குடி எம்.எல்.ஏ'வுமான டி.ஆர்.பி.ராஜா கிட்டதட்ட அல்ல நிஜ வாழ்வில் ஒரு "ராசுக்குட்டி" ராஜா'வாக வலம் வருகிறார். அவர்தான் தற்பொழுதைய மன்னார்குடி தொகுதிக்கு தி.மு.க'வின் வேட்பாளர்.

கடந்த பத்து ஆண்டுகளாக மன்னார்குடி எம்.எல்.ஏ "ராசுக்குட்டி" ராஜா'தான். ஆனால் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. அவர் செய்த பணிகளை விட அவர் பணிகள் செய்த மாதிரி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அதிகம்.

குறுகிய போக்குவரத்து தடங்கள், குண்டும் குழியுமான சாலைகள், சிறுநீர் வாடையுடன் கூடிய பேருந்து நிலையம், மழை பொழிந்தால் தண்ணீர் தேக்கம், முறையற்ற சாக்கடை வடிவமைப்பு, விவசாயத்தை நம்பிய ஊருக்கு தேவையில்லாத சாராய ஆலை, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பிற்கு ஒன்றுமே செய்யாத கையாலாகாததனம் என "ராசுக்குட்டி" ராஜா'வின் கடந்த பத்தாண்டுகள் சாதனை ஏராளம்.

எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஓட்டு கேட்டு வருகிறார் என இவர் போன பின் சிரித்துக்கொண்டே கேட்கின்றனர் அசேஷம் பகுதி மக்கள், மறுபுறத்திலோ "ராசுக்குட்டி" ராஜா 'செம்ம செட்டில்டு' என்கின்றனர் சுந்தரக்கோட்டை பகுதி மக்கள். வேறு பகுதியிலோ "ஊருக்கு இதுவரைக்கும் சாராய ஆலை எதுக்குன்னே தெரியலை, ஆனா அப்பா, புள்ளை ரெண்டு பேருமே சம்பாதிக்குறாங்க" என சலித்துகொள்கின்றனர் கீழ வீதி மக்கள். தளிக்கோட்டையிலோ "இவங்க ஊருக்கு ரயில்வே ஸ்டேஷன் கொண்டு வந்ததது மக்களுக்கு இல்லை! இவங்க 'கோல்டன் வேட்ஸ்' சாராய ஆலை சரக்கு பாட்டில் எல்லாத்தையும் வெளியேத்ததான்" என்கின்றனர் இவர் சமுதாய ஆட்களே. இப்படி மன்னார்குடி முழுக்க "ராசுக்குட்டி" ராஜா'வுக்கு அமோக ஆதரவு.

"ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப்போராரு" என பாட்டுபாடி கோடிகளில் விளம்பரம் செய்யும் ஸ்டாலினுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக "ராசுக்குட்டி" ராஜா'தான் மன்னார்குடி எம்.எல்.ஏ என தெரியாதா?

விடியல் என்பது பாடல் வரிகளில் இல்லை செயலில் உள்ளது என்பது "ராசுக்குட்டி" ராஜா'வுக்கு புரியாமல் இருக்கலாம் ஏனெனில் அவருக்கு வயது போதாது. ஆனால் கருணாநிதியுடன் அரசியல் செய்த பாலு மற்றும் கருணாநிதியின் வாரிசு எனக்கூறி தலைவர் பதவியில் அமர்ந்த ஸ்டாலினுக்கு புரியவா புரியாது?

Next Story
கதிர் தொகுப்பு
Trending News