உள்நாட்டுப் போருக்காக தயாராகிக் கொண்டிருக்கிறோம்- மிரட்டிய வி.சி.க. நிர்வாகி!
By : Shiva
மோடி அரசுக்கு எதிராக உள்நாட்டு போருக்காக மக்களை தயார் செய்து கொண்டிருக்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடி சிறுபான்மையினருக்காக செய்துள்ள நலத் திட்டங்களை பற்றி அறியாமல் வாட்ஸ்அப் குறிப்புகளை வைத்து இது போன்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உளறி கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று கூறி வாக்குகளை சேகரித்து வருகின்றனர். ஆனால் பத்தாண்டுகள் கழித்து நடைபெறும் தேர்தல் என்பதால் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும் அதனால் தாங்கள் எப்படியாவது வெற்றி பெற்று விடுவோம் என்ற அதீத நம்பிக்கையில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெண்கள் முதல் கடவுள் வரை அனைவரையும் இழிவாக பேசி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் மோடி அரசுக்கு எதிராகவும் பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராகவும் இந்தியா ஒரு உள்நாட்டு போரை சந்திக்கும் என்றால் அது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மூலமாக தான் நடக்கும் என்று பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
Do you want people who talk about having a civil war and preparing an army for that, rule this state? Vote wisely🙏🙏 pic.twitter.com/MDtwQJXMe8
— Vishwatma 🇮🇳 (@HLKodo) March 30, 2021
விடுதலை சிறுத்தைகள் கட்சி இதுவரை சிறுபான்மையினருக்காக என்ன செய்தது என்றும் அதே போல் மோடி அரசு என்ன செய்தது என்றும் விவாதிக்க தயாராக இல்லாத கட்சி தலைவரை கொண்ட அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் உள்நாட்டுப்போர் தொடர்வோம் என்று தெரிவித்துள்ளது வி.சி.க.வின் மனநிலையை காட்டுகிறது என்று பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க. கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான உதயநிதி ஸ்டாலின், ராசா, கலாநிதி மாறன், லியோனி போன்றோர் பெண்களை இழிவுபடுத்தியும், அவதூறான சொற்களை பொது மேடையில் பேசி கூடியிருக்கும் பெண்களை முகம் சுளிக்க வைக்கும் நிலையில் தற்போது அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த ஒருவர் பயங்கரவாத நிகழ்வை அரங்கேற்ற போவதாக தெரிவித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.