ஸ்டாலின் குடும்பத்தில் யாருக்கும் அதிகாரத்தையோ, பதவியையோ விட்டு தர மாட்டார்கள் - பிரச்சாரத்தில் தி.மு.கவை தோலுரித்த முதல்வர்!

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த பல ராஜாக்கள் முதல்வர்'களாக இருப்பார்கள் என பிரச்சாரத்தில் தி.மு.க'வின் விபரீதத்தை மக்களிடம் விவரித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
நேற்று அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து குன்னூரில் பேசிய எடப்பாடி க பழனிசாமி கூறியதாவது, "தி.மு.க ஆட்சியை பிடித்தால் ஸ்டாலின்,உதயநிதி, கனிமொழி,தயாநிதி மாறன் என்று பல முதல்வர்கள் உருவெடுப்பார்கள், கட்சிக்குள் இருக்கும் ராஜாக்களின் பட்டியல் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்களா இருப்பது தெரிகிறது.
தி.மு.க'வை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்களே குட்டி ராஜ்ஜியங்கள் நடத்தி வந்தனர். அமைச்சர்களை விட அதிகாரம் படைத்தர்களாக தி.மு.க'வின் மாவட்ட செயலாளர்கள் வலம் வந்தனர். இதை மிஞ்சிடும் வகையில் தற்போது தி.மு.க'வில் குட்டி ராஜாக்கள் வலம் வருகின்றனர். ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்களே இந்த குட்டி ராஜாக்களாக தி.மு.க'வை ஆக்கிரமித்துள்ளனர்" என்றார்.
மேலும் பேசிய அவர் "கருணாநிதி குடும்பம் யார் கையிலும் அதிகாரத்தையோ, பதவியையோ விட்டு தரமாட்டார்கள்" என வெளிப்படையாகவே பேசி வாக்கு சேகரித்தார்.