Kathir News
Begin typing your search above and press return to search.

"ஸ்டாலினுக்கு சொந்தமா காரே கிடையாது ஆனா பொண்ணு வீடு மட்டும் அரண்மனை மாதிரி இருக்கு" என வாயடைத்து நிற்கும் மக்கள்!

ஸ்டாலினுக்கு சொந்தமா காரே கிடையாது ஆனா பொண்ணு வீடு மட்டும்  அரண்மனை மாதிரி இருக்கு என வாயடைத்து நிற்கும் மக்கள்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  2 April 2021 12:45 PM GMT

இன்று வருமான வரித்துறை சார்பில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் ரெய்டு நடப்பதால் அவர் வீட்டின் புகைப்படம் வெளியானது இதனை தொடர்ந்து தி.மு.க'வின் உடன்பிறப்புகளே "ஏது இவ்ளோ பெரிய வீடா?" என வாயடைத்து போயுள்ளனர்.

இன்று காலை முதல் சென்னை நீலாங்கரையில் உள்ள ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. செந்தாமரை வீடு, அலுவலகம் உள்பட 4 இடங்களில் 25'க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


அதேபோல், சபரீசனின் நண்பர்களான கார்த்திக் (அண்ணாநகர் தொகுதி தி.முக. வேட்பாளர் மோகன் மகன்), ஜீ ஸ்கொயர் பாலா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடக்கிறது. நீலாங்கரையில் உள்ள ஐபேக் அலுவலகத்திலும் சோதனை நடக்கிறது. மேலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி'யின் நேரடி உதவியாளர் சீனிவாசன் வீட்டிலும் இன்று மதியம் முதல் ரெய்டு நடந்து வருகிறது.

இதனை தொடர்ந்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரையின் வீட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனை பகிர்ந்த இணைய தள வாசிகள் "ஸ்டார் ஹோட்டலை போல் உள்ளது" எனவும், "சிலர் வசிப்பதற்கு இவ்வளவு பெரிய வீடா" எனவும், "இவ்வளவு பெரிய வீட்டை கட்ட வருமானம் ஏது" எனவும் கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்.





இன்னும் சிலரோ ஸ்டாலினுக்கு சொந்தமாக கார் கூட இல்லை என வேட்பாளர் பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார். அப்படி இருக்கையில் இவ்வளவு பெரிய வீடு மட்டும் எப்படி?" என வாயடைத்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News