எடப்பாடி பழனிசாமி மாவட்டமாக அறிவித்த மயிலாடுதுறையை நேற்று பிரச்சாரத்தில் "மயிலாடுதுறையை தரம் உயர்த்துவேன்" என வாக்குறுதிகள் அள்ளி வீசிய ஸ்டாலின்!

By : Mohan Raj
தமிழக முதல்வர் எடப்பாடி மாவட்டமாக அறிவித்த மயிலாடுதுறை மாவட்டத்தை சிறப்பாக மாற்றி காட்டுவேன் என வலிய வந்து பிரச்சாரம் செய்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின், ஆட்சிக்காலத்தில் மயிலாடுதுறை'யை கண்டுகொள்ளாமல் தேர்தர் நேரத்தில் மட்டும் தரம் உயர்த்துவேன் என்று பொய் வாக்குறுதி தருகிறார் ஸ்டாலின் என மயிலாடுதுறை மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தி.மு.க வேட்பாளர்களுக்கு ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்பொழுது பேசிய அவர் கூறியதாவது, "மயிலாடுதுறை அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்படும் என்றும், அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, குளிர்பதனக் கிடங்கு போன்றவை தொடங்கப்படும்" என்றும் வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.
மேலும், "பூம்புகார் தொகுதியில் அரசு வேளாண்மைக் கல்லூரி தொடங்கப்படும் என்று உறுதியளித்த ஸ்டாலின் பூம்புகார், தரங்கம்பாடி ஆகிய ஊர்கள் அனைத்து வசதிகளுடன் கூடிய சிறப்புச் சுற்றுலா மையங்களாக மேம்படுத்தப்படும்" என்றும் பிரச்சாரம் செய்தார்.
5 முறை தமிழகத்தை தி.மு.க ஆண்ட பொழுது மயிலாடுதுறைக்கு ஒன்றுமே செய்யவில்லை ஆனால் 4 ஆண்டுகள் ஆண்ட எடப்பாடி க பழனிசாமி மயிலாடுதுறை'யை மாவட்டமாக அறிவித்தார். இப்பொழுது தேர்தல் வருவதால் வாக்குறுதிகள் அள்ளி வீசி பதவியை பிடிக்க வருகிறார் என மயிலாடுதுறை வாழ் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
