தி.மு.க வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணாவை வாக்கு சேகரிக்க விடாமல் விரட்டியடித்த தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள்!

நாடளுமன்றத்தில் தேவேந்திர குல வேளாளர் சட்ட மசோதாவிற்கு தி.மு.க எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்ததால் ஆலங்குளம் தி.மு.க வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணாவை பிரச்சாரம் செய்ய விடாமல் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி தி.மு.க வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா கிராமங்களில் பிரச்சாரத்திற்கு சென்றார். அப்பொழுது கடையம் ஒன்றியம் கீழக்கடையம் பஞ்சாயத்து கல்யாணிபுரம் கிராமத்தில் வாக்கு சேகரிக்க தி.மு.க'வினரோடு பூங்கோதை ஆலடி அருணா சென்றார்.
அப்பொழுது அங்கே குழுமியிருந்த தேவேந்திர குல வேளாளர் மக்கள் "மத்திய அரசு எங்களை தேவேந்திர குல வேளாளர் என அறிவக்கும் மசோதா'வை நாடாளுமன்றத்தில் எதிர்த்து வெளிநடப்பு செய்துவிட்டு இப்பொழுது எந்த முகத்துடன் எங்களிடத்தில் வாக்கு கேட்டு வருகிறீர்கள்?" என தி.மு.க'வினரை விரட்ட துவங்கினர்.
அங்கு பாதுகாப்பிற்கு குழுமியிருந்த காவல்துறையினர் தடுத்தும் அந்த பகுதி மக்கள் சமாதானம் ஆகவில்லை. இதனையடுத்து வாக்கு சேகரிக்காமல் தி.மு.க வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா தன் கட்சியினருடன் திரும்பி சென்றார்.