தி.மு.க - காங்கிரஸ் தமிழகத்தில் இருந்து ஒழிந்தால்தான் தமிழகம் உருப்படும் - பிரச்சாரத்தில் கர்ஜித்த அமித்ஷா!

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் இரு தினங்களில் நடைபெறுவதை முன்னிட்டு தமிழகத்தில் பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியிள்ளது. அரசியல் கட்சிகள் கடைசிகட்ட ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளன. இந்த நிலையில் அ.தி.மு.க கூட்டணி சார்பாக சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்தவெளி வாகனம் மூலம் சென்னை தேனாம்பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, " தமிழகம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் தி.மு.க மற்றும் காங்கிரஸின் ஊழல் மற்றும் குடும்ப அரசியலை அகற்றவேண்டும் என கூறினார். மேலும் மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியாவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வந்துள்ளதாகவும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற இந்த அ.தி.மு.க ஆட்சிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஒன்றாக இணைந்து எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர் எனவும், மத்தியில் கூட்டணி ஆட்சி இருக்கும் நேரத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வரலாம், எனவே இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்" எனவும் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.