தி.மு.க.வினர் வெடித்த பட்டாசால் வீடு எரிந்து நாசம் - மக்கள் சோகம்!
By : Shiva
திருவாரூரில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நடைபெற்ற பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசினால் ஏழை ஒருவரின் குடிசை வீடு எரிந்து நாசம் ஆனதால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் திமுக சார்பாக பூண்டி கலைநாதன் போட்டியிடுகிறார். இவர் இன்று திருவாரூரில் உள்ள பாலாஜி நகரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை வரவேற்பதற்காக அங்கு கூடிய உடன்பிறப்புகள் பட்டாசுகளை வெடித்ததில் அந்த பகுதியில் குடியிருக்கும் பெயிண்டர் வேலை செய்து வரும் தியாகராஜன் என்பவரது குடிசையின் மீது பட்டாசு விழுந்துள்ளது.
இதன் காரணமாக குடிசை வீடு பற்றி எரிய ஆரம்பித்தது. அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் எரிய ஆரம்பித்தால் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வந்து தீயை அணைப்பதற்குள் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.
திமுகவினரின் பிரச்சாரத்தால் தனது வீட்டையும் சேமிப்பையும் இழந்து தியாகராஜனின் மனைவி கண்ணீர் விட்டு அழுதது அங்கு கூடியிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதற்கு காரணமாக இருந்த திருவாரூர் தி.மு.க. வேட்பாளர் உடனடியாக அந்த குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்கி புதிதாக வீடு கட்டி தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் சமயத்தில் மட்டுமே இந்த பகுதிக்கு வரும் திமுக எம்எல்ஏக்கள் செய்யும் இதுபோன்ற அறிவற்ற செய்கைகளால் பொதுமக்களுக்கு பெரும் இம்சை ஏற்பட்டுவதாக பொது மக்கள் விமர்சித்து வருகின்றனர்.